பாஜகவுக்கு செம செக்.. கேசிஆர் கெத்து கேம்.. விவசாயிகள் வாக்குகளை வாரி சுருட்டும் மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது என அம்மாநிலா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மலைபோல நம்பி இருப்பதற்கு காரணமே விவசாயிகளுக்கு வாரி வழங்கி இருக்கும் திட்டங்கள்தான் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் மகத்தான சாதனைகளில் ஒன்று விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது. இன்றளவும் திமுகவின் அசைக்க முடியாத வாக்கு வங்கியின் அச்சாரமாக இருப்பது இந்த இலவச மின்சாரம். இதனைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தாம் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ரூ7,000 கோடி விவசாய கடன்களை அதிரடியாக தள்ளுபடி செய்து நடைமுறைப்படுத்தினார். கருணாநிதி மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைகள்தான் இன்றளவும் திமுகவுக்கான தேர்தல் பிரசார அஸ்திரமாகவும் இருந்து வருகிறது.

Waiving Farmer loans, Free Insurance, power, irrigation water- KCR Formula for Assembly Poll

இதேபாணியைத்தான் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இடைவிடாமல் தொடர்ந்து பின்பற்றுகிறார். அதாவது கருணாநிதி பாணியிலான விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, இலவச இன்சூரன்ஸ், இலவச மின்சாரம் என ஒன்றுவிடாமல் வாரி வழங்கி இருக்கிறார் கே.சந்திரசேர ராவ். தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு ரூ5 லட்சம் இலவச இன்சூரன்ஸ் வழங்கியிருக்கிறார் கேசிஆர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ஒரு கோடி ஏக்கர் நிலத்துக்கு இலவச பாசன நீர், விவசாய கடன் தள்ளுபடி என ஏற்கனவே அதகளப்படுத்தி கொண்டிருக்கிறார் கேசிஆர்.

தற்போது சுதந்திர தின பரிசாக ரூ99,999 வரை கடன் பெற்றிருந்தாலும் அந்த கடனும் தள்ளூபடி என அதிரடியாக அறிவித்துவிட்டார் கேசிஆர். இதற்காக ரூ5,809 கோடியையும் ஒதுக்கீடு செய்திருக்கிறார் கேசிஆர். இந்தியாவிலேயே விவசாய கடன்களை அதிக அளவில் தள்ளுபடி செய்த முதல்வர் கேசிஆர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரான போது சுமார் 35 லட்சம் விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். 2108-ல் மீண்டும் முதல்வரான போது சுமார் 16.22 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார். அத்துடன் விவசாயிகளுக்கான பயிர் கடன்களையும் வாரி வழங்கி வருகிறார் கேசிஆர். மேலும் நாட்டிலேயே குறைந்தபட்ச ஆதார விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யும் மாநிலமாகவும் தெலுங்கானா இருந்து வருகிறது. ரூ1,33,000 கோடிக்கு நேரடி நெல் கொள்முதல்; ரூ11,437.55 கோடிக்கு தானியங்கள் நேரடி கொள்முதல் என அசத்தி இருக்கிறது பிஆர்எஸ் அரசு. இப்படி விவசாயிகளை அங்கும் எங்கும் நகரவிடாமல் வலிமையான வாக்கு வங்கியாக உருவாக்கி வைத்திருப்பதாலேயே தெலுங்கானா முதல்வர் கேசிஆர், பாஜக- காங்கிரஸுக்கு சவால்விடும் சிம்ம சொப்பனமாகவே திகழ்கிறார் என்கின்றனர் பிஆர்எஸ் தலைவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+