"கிப்ட் வேண்டாம்.." பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் அதுவே போதும்.. டிரெண்டாகும் திருமண பத்திரிக்கை
ஹைதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு வருவோர் பரிசு எடுத்து வருவதற்குப் பதிலாக மோடிக்கு வாக்களிக்குமாறு திருமண அழைப்பிதழில் அச்சிட்டுள்ளது டிரெண்டாகி வருகிறது.
லோக்சபா தேர்தல் இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது.

மாப்பிள்ளையின் தந்தை: இதற்கிடையே தெலுங்கானாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு வருவோரிடம் வினோதமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது திருமணத்திற்கு வருவோர் கிப்ட் தர வேண்டாம்.. மாறாக மோடிக்கு வாக்களித்தால் போதும் என அவர் பதிவிட்டுள்ளார். தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்கே அந்த மாப்பிள்ளையின் தந்தை இதைத் தனது திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் தனது மகளின் அடித்துள்ள அந்த திருமண பத்திரிக்கையின் படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் திருணம் நடக்கும் இடம் மற்றும் நேரம் போன்ற வழக்கமான விவரங்களுடன், கோரிக்கை ஒன்றையும் அந்த நபர் வைத்து இருக்கிறார்.

மோடிக்கு வாக்களியுங்கள்: அதாவது அந்த பத்திரிக்கையில் "நரேந்திர மோடிக்கு வாக்களிப்பது நீங்கள் எங்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசாக இருக்கும்" என்று வாசகத்தை அவர் அச்சிட்டுள்ளார். திருணத்திற்கு வருவோர் வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நந்திகாந்தி நர்சிம்லுவும் அவரது மனைவி நந்திகாந்தி நிர்மலா.. இவர்களின் மகன் சாய் குமாருக்கு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் திருமணம் நடக்கும் நிலையில், அப்போது கிப்ட் எதுவும் எடுத்த வர வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார். அதற்குப் பதிலாக மோடிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
கோரிக்கை: இது குறித்து நந்திகாந்தி கூறுகையில், "நான் அருட்லா கிராமத்தில் மரப்பொருட்கள் விற்பனை செய்து வருகிறேன். எனது இரண்டு மகள்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் நான் இந்த யோசனையை (மோடிக்கு ஆதரவு அளிக்குமாறு பத்திரிக்கையில் கோரிக்கை விடுப்பது) சொன்ன போது நண்பர்கள் வேண்டாம் என்றார்கள். ஆனால், எனது குடும்பத்தினர் இதற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தனர். குடும்பத்தினர் ஓகே சொன்ன பிறகே இந்ச வாசகத்தை நான் பத்திரிக்கையில் சேர்த்தேன்" என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த 2019 தேர்தலுக்கு முன்பு, உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் இதேபோல பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வாசகத்தைத் தனது பத்திரிக்கையில் போட்டு இருந்தார்.
அந்த அழைப்பிதழில், "பரிசுகளைக் கொண்டு வராதீர்கள், ஆனால் தேச நலன் கருதி, மணமக்களை ஆசீர்வதிக்க மோடிக்கு வாக்களியுங்கள்" என்று இருந்தது. இருப்பினும், அது தேர்தல் விதிமீறல் என்று சொல்லித் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications