லூஸ்டாக் விட்டா நாக்கை அறுப்போம்- தெலுங்கானா பாஜக தலைவருக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் வார்னிங்
ஹைதராபாத்: நெல் கொள் முதல் விவகாரத்தில் தெலுங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் அவதூறாக பேசிவந்தால் அவரது நாக்கை நாங்கள் அறுப்போம் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தெலுங்காவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் காலூன்றுவதற்கு பாஜக கடும் பிரயத்தனம் செய்து வருகிறது.
டி.ஆர்.எஸ் கட்சியின் அதிருப்தியாளர்களுக்கு வலைவீசி அதன் மூலம் ஆதாயம் அடைவது என்பதை பாஜக வியூகமாக கையில் எடுத்துள்ளது. அதேநேரத்தில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ், மகள் கவிதா இடையேயான அதிகார சண்டையை எப்படி சாதகமாக்குவது எனவும் கணக்குப் போட்டு காய்களை நகர்த்துகிறது பாஜக.

செஸ் வரியை குறைக்கவும்
இந்த நிலையில் டி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிராக பாஜக பல்வேறு போராட்டங்களையும் அறிவித்து வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்று சொல்வதற்கு பாஜக தலைவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான், பெட்ரோலிய பொருட்கள் மீதான செஸ்வரியை குறைக்க வேண்டும்.

உயர்த்தியவர்களிடம் கேளுங்க..
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தெலுங்கானாவை ஆளும் டி.ஆர்.எஸ். அரசு உயர்த்த வில்லை. நாங்கள் வாட் வரியை உயர்த்தாத போது ஏன் அதை குறைக்க வேண்டும்? யார் இந்த வாட் வரியை ஏற்றினார்களோ அவர்களிடம்தான் குறைக்க சொல்ல வேண்டும். அவர்களிடம்தான் இந்த கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். அர்த்தமே இல்லாமல் தெலுங்கானா அரசை பாஜக விமர்சிக்கக் கூடாது.

பாஜக தலைவரின் நாக்கை அறுப்போம்
தெலுங்கானாவில் நெல் கொள்முதல் பணிகளை மத்திய அரசுதான் மேற்கொண்டு வருகிறது. ஆனால் நெல் கொள்முதல் செய்ய மாட்டோம் என்கிறது மத்திய அரசு. இதனால்தான் நெல்லைத் தவிர இதர பயிர்களை பயிரிட வேண்டும் என்கிறோம். இதை புரிந்து கொள்ளாமல் தெலுங்கானா மாநில பாஜக தலைவர்கள் வெற்று சவடால்களை பேசக் கூடாது. எங்கள் மீது தொடர்ந்து அவதுறாக தெலுங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் பேசினால் அவரது நாக்கை அறுத்துவிடுவோம்.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்
பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்காமல் சாமானியர்கள் மீது சுமையை சுமத்துகிறது மத்திய அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனால் மத்திய பாஜக அரசோ, பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலையை கடுமையாக உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை குறைக்க வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும். இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications