ஆந்திர ஐடி ஊழியருடன் திருமண நிச்சயதார்த்தம்.. யாருமே இப்படி செய்யாதீங்க.. 12 பக்க கடிதம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ரெஹானா என்பவர் பட்டதாரி ஆவார். இவருக்கும் பொதட்டூர் பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். ஷாஜகான் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்கிறார். இந்நிலையில் ரெஹானா எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது. இது தொடர்பாக 12 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் உள்ள பட்டேல் ரோட்டைச் சேர்ந்த 26 வயதாகும் ரெஹானா என்பவர் பட்டதாரி ஆவார். இவருக்கும், பொதட்டூர் பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளார்கள் ஷாஜகான் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

What decision taken by a young woman in Andhra two months after her engagement

ரெஹானா- ஷாஜகான் ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தினர். இதன்பின்னர் இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ரெஹானா திடீரென வாழ்க்கையை முடித்துக் கொண்டார் இது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து ரெஹானா அறையில் இருந்து 12 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

அந்த கடிதத்தில், ஷாஜகானுக்கு 4 பெண் தோழிகள் இருந்ததாகவும், தன்னை திருமணம் செய்துகொள்ள பிடிக்கவில்லை என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த காரணத்தால் தான் இந்த முடிவினை தேடிக்கொண்டதாக உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

26 வயது இளம்பெண் ரெஹானாவின் மரணம் ஐடி துறையில் இருப்பவர்களின் உறவுச் சிக்கல்கள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய மன அழுத்தங்களை அப்பட்டமாக காட்டுகிறது. ஏனெனில் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் எப்போதும் ஆன்லைனில் இருப்பதாலும், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகம் இருப்பதாலும் அவர்களுக்குப் புதிய நபர்களுடன் பழகுவது மிக எளிதாக உள்ளது. அங்கு "தோழிகள்" அல்லது "நண்பர்கள்" என்ற பெயரில் எல்லையற்ற தொடர்புகள் இருக்கும்போது, திருமண பந்தத்திற்குள் நுழையும்போது ஒருவிதக் குழப்பம் ஏற்படுகிறது. தனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படி இருக்கிறாரே என்று ரெஹானா எடுத்த முடிவு முட்டாள்தனமானது.. ஏனெனில் பிடிக்கவில்லை என்றால், சரியில்லை என்றால் விலகிவிடலாம். அதற்கு பதில் வாழ்க்கையே வேண்டாம் என்று விரக்தியில் முடிவெடுப்பது முட்டாள்தனத்தின் உச்சம் தான்.

அதேபோல் திருமண தேதி குறிக்கப்பட்ட பிறகு, "நமக்கு இந்த வாழ்க்கை செட் ஆகுமா?", "துணைவர் உண்மையானவராக இருப்பாரா?" என்ற பயம் பலருக்கு ஏற்படும் ஒன்று தான். : இந்த நேரத்தில் துணைவர் தரும் ஏமாற்றம் அல்லது அலட்சியம், ஒருவரை தவறானமுடிவெடுக்க வைத்துள்ளது என்பது கசப்பான உண்மை.

நிச்சயதார்த்தத்திற்குப் பின் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மனநல ஆலோசகரை அணுகுவது தவறல்ல.

முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+