Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மா இறந்தப்ப கூட.. டெல்லியில் அமித் ஷாவிடம் தகித்த தமிழிசை.. என்னதான் நடந்தது தெலுங்கானாவில்?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் தமிழிசை நீண்ட புகார் பட்டியலை வாசித்து இருக்கிறாராம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பிரதமர் மோடியை சந்தித்தார். அந்த சந்திப்பில், தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவை பற்றி புகார் வாசித்துள்ளார் தமிழிசை.

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

டெல்லி தமிழிசை

டெல்லி தமிழிசை

முக்கியமாக அங்கு மேலவைக்கு கவுசிக் ரெட்டி என்ற எம்எல்ஏவை ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்தது. இதை தமிழிசை ஏற்றுக்கொள்ளாததும் இந்த மோதலுக்கு காரணம். ஆளுநராக தமிழிசை இந்த நியமனத்தை நிராகரித்தார். இது மோதல் தீவிரம் அடைய காரணம் என்கிறார்கள். அரசு குறித்து ஆளுநர் கருத்து தெரிவிப்பது, சில மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது என்று முக்கியமான புகார்களை தமிழிசை மீது கேசிஆர் தரப்பு வைத்து வருகிறது.

தமிழிசை மோதல்

தமிழிசை மோதல்

இந்த நிலையில்தான் இது தொடர்பாக பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தமிழிசை சந்தித்து இருக்கிறார். இதில் தெலுங்கானாவில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அமித் ஷாவிடம் புகார் கொடுத்துள்ளார் தமிழிசை. குறிப்பாக, தெலுங்கான மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், நிதி ஒதுக்கீடுகளில் ஏற்படும் சந்தேகங்கள், மத்திய அரசின் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை உள்ளிட்ட விசயங்கள் தொடர்பாக முதல்வருக்கு என்னால் அனுப்பி வைக்கப்படும் கடிதங்களுக்கு எந்த பதிலும் தருவதில்லை என்றும் பிரதமர் மோடியிடம் புகார் அளித்தார்.

என்ன மோதல்?

என்ன மோதல்?

அவரின் உத்தரவால் அரசின் உயரதிகாரிகளும் எனக்கு பதில் தராமல் அலட்சியப்படுத்துகிறார்கள். மாநிலத்தில் நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். என் அம்மா இறந்த போது கூட முதல்வர் கேசிஆர் இரங்கல் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ஆளுநருக்கும், முதல்வருக்கும் மோதல் இருந்தாலும் ஆளுநர் பதவிக்கு உண்டான மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

இரங்கல்

இரங்கல்

ஆனால் இங்கே நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னை பாஜக நிர்வாகி போல பார்க்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் பாஜக நிர்வாகியாக செயல்படவில்லை என்றெல்லாம் புகார் வாசித்துள்ளாராம் தமிழிசை. சமீபத்தில் உகாதி விழாவின் போது ஆளுநர் மாளிகை கொடுத்த விருந்தில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அழைப்பு கொடுக்கப்பட்டும் அமைச்சர்கள் எல்லோரும் ஆப்சென்ட்.

பின்னணி இதுதான்

பின்னணி இதுதான்

முழுகு மாவட்டத்தில் நடந்த சமக்கா சரலக்கா விழாவில் தமிழிசை கலந்து கொள்ள சென்றார். அவரை அழைக்க அங்கு அமைச்சர்கள் யாரும் வரவில்லை. எம்எல்ஏக்கள் வரவில்லை. ஆட்சியர் கூட வரவில்லை. ஏன் எஸ்பி கூட வரவில்லை. இதுதான் தமிழிசையின் கோபத்திற்கு காரணம் என்கிறார்கள். இதை பற்றித்தான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரிடமும் தமிழிசை பேசி இருக்கிறாராம்.

புதுச்சேரி மோதல்

புதுச்சேரி மோதல்

அதேபோல, புதுச்சேரியின் முதல்வர் ரெங்கசாமி தரப்பிலிருந்தும் எனக்கு ஒத்துழைப்பு இல்லை. தலைமைச் செயலாளரிடம் இது பற்றி நான் கேள்வி எழுப்பினால், "பாஜகவின் சீனியர் அமைச்சர் நமச்சிவாயம் தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறாரே... என அலட்சியமாக சொல்கிறார்" என்று புலம்பியிருக்கிறாராம் தமிழிசை என்கிறது டெல்லி வட்டாராங்கள்.

பதிலடி

பதிலடி


இதற்கு தெலுங்கானா அமைச்சர் கேடி ராமா ராவ் பதிலடி கொடுத்துள்ளார். அதில், தமிழிசை தேவையின்றி தான் அவமதிக்கப்படுவதாக கற்பனை செய்கிறார். அவரை யாரும் அவமானம் செய்யவில்லை. அவருக்கு உண்டான மரியாதையை கொடுத்து உள்ளோம். அவர்தான் கவர்னர் போல செயல்படவில்லை. பாஜக நிர்வாகி போல் செயல்படுகிறார். அவர் பாஜக கட்சியில் இருந்து வந்தவர். அரசியல் பின்புலத்தோடு வந்தவர். அதனால் இப்படி செயல்படுகிறார், என்று விமர்சனம் வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+