நெருங்கும் லோக்சபா தேர்தல்.. தெலுங்கானா Ex முதல்வர் மகள் கே கவிதா இன்று திடீர் கைது! என்ன காரணம்
ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவை அமலாக்கத் துறை இப்போது கைது செய்துள்ள நிலையில், கைதிற்கான காரணம்.. அமலாக்கத் துறையின் அடுத்தகட்ட திட்டம் என்பவை குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2014 முதல் 2023 வரை முதல்வராக இருந்தவர் கேசி ராமராவ். இவரது மகள் கவிதா 2014 முதல் 2019 வரை லோக்சபா உறுப்பினராக இருந்த நிலையில், அதன் பிறகு இப்போது இவர் தெலுங்கானா மேலவை உறுப்பினராக இருக்கிறார்..

திடீர் கைது: இதற்கிடையே கேசிஆர் மகள் கவிதா இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடத்திய நிலையில், மாலை அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே அவரது கைது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாகவே கே. கவிதா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சட்ட நடைமுறைகளை முடித்துவிட்டு கவிதாவை டெல்லிக்கு அழைத்து வரவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதே வழக்கில் தான் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு அவர் பல மாதங்களாகச் சிறையில் இருக்கிறார்.
என்ன காரணம்: இந்தச் சூழலில் தான் 45 வயதான கவிதா இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மதுபான கொள்கை தொடர்பான வழக்கின் விசாரணைக்காக கவிதாவை கடந்த ஜனவரி 16ஆம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, இந்த வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்குச் சம்மன் அனுப்ப முடியாது என்று கவிதா தரப்பில் கூறப்பட்டு இருந்தது..
இருப்பினும், உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு கவிதாவுக்கு வழங்கியது தற்காலிக நிவாரணம் தான் என்றும் அது இப்போது பொருந்தாது என்றும் அமலாக்கத் துறை தெரிவித்து இருந்தது. விளக்கம் அளித்த பிறகும் விசாரணைக்கு கவிதா ஆஜராகாத நிலையில், அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அடுத்தகட்டமாக அவரை டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் கடந்த ஆண்டு மூன்று முறை விசாரணை நடத்தப்பட்டு இருந்தது. மேலும், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது தெலுங்கானா மேலவை உறுப்பினராக இருக்கும் கவிதா தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தெலுங்கானாவில் பின்வாசல் வழியாக நுழைய முயலும் மத்திய அரசு மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கிய காரணம் இதுதான்: டெல்லியில் கடந்த 2021- 2022 காலகட்டத்தில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், இதில் ஊழல் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணையில் தான் இந்த கைதுகள் நடந்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் அமித் அரோரா.. இவர் விசாரணையின் போது கவிதாவின் பெயரைச் சொன்னதே முக்கிய காரணம்.
"சவுத் குரூப்" என்ற மதுபான விற்பனை க்ரூப் ஒன்று இருப்பதாகவும் அந்த க்ரூப் விஜய் நாயர் என்பவர் மூலம் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்தது என்பதே புகாராகும். சவுத் குரூப்பை கையில் வைத்திருந்த நபர் கவிதாவின் வணிக கூட்டாளி என்றும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications