Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு முழுக்க ஹலால் உணவுக்கு தடை? மத்திய அரசு "இன்னும்" முடிவெடுக்கவில்லை.. சொல்வது அமைச்சர் அமித் ஷா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உத்தரப் பிரதேசத்தில் ஹலால் சான்றிதழுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுக்க இதுபோல தடை விதிக்கப்படுமா என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில முக்கிய தகவலைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் ஹலால் சான்றிதழுக்குத் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. ஹலால் சான்றிதழ் அளிப்பதில் முறைகேடு நடப்பதாகக் கூறி ஹலால் சான்றிதழுக்கு உபி அரசு தடை விதித்தது.

 What Union minister Amit Shah says about halal ban across India by Centre

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது இணையத்திலும் பேசுபொருள் ஆனது. விரைவில் இதேபோல நாடு முழுக்க தடை விதிக்கப்படும் என்ற பேச்சும் இணையதளத்தில் பரவலாக எழுந்தது.

அமித் ஷா: இதற்கிடையே சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளார். ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களின் விற்பனைக்குத் தடை விதிக்கும் எந்தவொரு முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று அமித் ஷா தெரிவித்தார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ஹலாலுக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் நவ.30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் ஹைதராபாத்தில் பாஜகவுக்கு ஆதரவாகத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளில் எந்தக் கட்சி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தெலங்கானா மக்கள்: ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, "தெலுங்கானா மக்கள் தங்கள் எம்எல்ஏ அல்லது அரசை மற்றி மட்டும் யோசித்து வாக்களிக்கக் கூடாது. தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து யோசித்து வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் உங்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை ஆய்வு செய்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தெலுங்கானா மக்கள் பாஜகவுக்குத் தான் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தெலுங்கானர் மாநிலம் நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகே உருவாக்கப்பட்டது. தெலுங்கானா உருவாகிக் கடந்த 10 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் பாருங்கள்,. ஒரு காலத்தில் வருவாய் உபரியாக இருந்த மாநிலத்தில் இப்போது பல லட்சம் கோடி கடன் இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை இல்லை. விவசாயிகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர், தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருக்கிறது.

பிஆர்எஸ்: தேர்தல் ரீதியாகவும் சரி கருத்தியல் ரீதியாகவும் சரி எங்களால் கேசிஆர் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது. நமது அரசியலமைப்பு யாருக்கும் சிறப்புச் சலுகைகளை வழங்க அனுமதிக்கவில்லை. ஆனால் கேசிஆர் மத ரீதியில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருகிறார். இது அரசியலமைப்புக்கு எதிரானது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் வழங்கப்படும் இந்த 4% இட ஒதுக்கீட்டை நிறுத்திவிட்டு, பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவோம்" என்றார்.

தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 இடங்கள் இருக்கும் நிலையில், அதில் பெரும்பான்மைக்கு 60 இடங்களில் ஒரு கட்சி வெல்ல வேண்டும். தெலுங்கானாவில் நவ. 30ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஒரே கட்டமாக டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+