அரசு பஸ்ஸில்.. யாருங்க இந்த பொண்ணு? எகிறி எகிறி பாய்ந்து "ஒரே எத்து".. அப்படியே அரண்ட மக்கள்: வீடியோ
ஹைதராபாத்: அந்த பெண் யார் என்றே தெரியவில்லை.. மாநில காவல்துறையே அந்த பெண்ணின் நடவடிக்கையை கண்டு அதிர்ந்து போயுள்ளது.
தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அப்போது அந்த பஸ்ஸில், கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.. அப்போது தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்ஸில் இளம் பெண் ஒருவர் ஏறினார்..

இலவச டிக்கெட்: கண்டக்டர் கங்காதரிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டிருக்கிறார்... உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டிருக்கிறார்..
இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்ட ஆரம்பித்துவிட்டார்.. இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்ஸில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்.
கெட்ட வார்த்தை: உடனே அந்த பெண், கண்டக்டரை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்ட துவங்கினார்.. ஒருகட்டத்தில் கண்டக்டரை எட்டி எட்டி உதைத்து தாக்க துவங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது..
பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டு ஒன்றை எடுத்து தந்து கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டிருக்கிறார்.. பஸ் ஸ்டாண்டிலிருந்து அப்போதுதான் பஸ்ஸை கிளப்பியிருப்பதால், 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று சொல்லி உள்ளார். இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு இன்னும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார்.. பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.. மறுபடியும் கெட்ட வார்த்தையில் திட்டி தீர்த்தார்.
எட்டி உதை: அப்படியிருந்தும்கூட, 10 ரூபாய் டிக்கெட்டுக்கு, டிக்கெட்டும், மிச்சம் 490 ரூபாயும் தந்துள்ளார். பணத்தை வாங்கி பர்ஸில் வைத்து கொண்டு, மறுபடியும் கண்டக்டரை எட்டி உதைத்திருக்கிறார்.. சீட்டில் அமைதியாக உட்காருமாறு கண்டக்டர் சொல்லியும், டிரைவர் மீது எச்சிலை துப்பி கொண்டே வந்திருக்கிறார்.
இதெல்லாம் பார்த்து, பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ந்து போய்விட்டார்கள்.. யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை.. எனினும், முத்தியலம்மா என்ற பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.. உடனே முத்தியலம்மாவின் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் தலையை மோதும்படி செய்திருக்கிறார்.

கங்காதரன்: இறுதியில் போலீஸ் வரை விவகாரம் சென்றது.. முத்தியலம்மாவும், கண்டக்டர் கங்காதரும், நடந்த சம்பவங்களை புகாராக சொன்னார்கள்.. அத்துடன், தங்களை எட்டி உதைத்து, அடித்து காயப்படுத்தி, எச்சில் துப்பிய அந்த பெண் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
இந்த சம்பவத்தில் மாநில முதல்வர் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வீடியோ: இவ்வளவு ரணகளம் பஸ்ஸில் நடந்தபோது, அதனை பயணிகளில் சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.. இதுதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோ பதிவின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.. போக்குவரத்து துறை அதிகாரிகளும் இது தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர். இவ்வளவு ரணகளம் செய்த அந்த பெண் யார் என்றே தெரியவில்லை.. விசாரணை முடியட்டும்.. பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications