ஹவுஸ் ஓனர்களை "சாய்த்த" புஜ்ஜி.. ஆந்திராவையே அலறவிட்ட வேலைக்கார பெண்.. போட்டோவை பார்த்தால் இவரா?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவையே அலறவிட்டுள்ளார் இந்த பெண்.. ஹை டோஸ் மாத்திரைகள் இந்த பெண்ணுக்கு எப்படி எங்கிருந்து கிடைத்தன? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். என்ன நடந்தது ஆந்திராவில்?

ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம் அங்கார நகரத்தை சேர்ந்தவர் சூர்யச்சந்திர சக்ரா ஜகதம்பா.. இவருக்கு செல்ல பெயர் புஜ்ஜி... இவருக்கு கல்யாணமாகிவிட்டது. ஆனால், 4 வருடங்களுக்கு முன்பே கணவர் இறந்துவிட்டார்.

வீட்டு வேலை: எனவே, வயிற்றுப்பிழைப்புக்காக வீடுகளில் வீட்டுவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.. ஆனால், எந்த வீட்டிலுமே, உரிமையாளர்களுக்கு இவர் உண்மையாக நடந்து கொள்ளவில்லை.. வீட்டின் உரிமையாளர்களுக்கு சாப்பாடு, டீ, காபி, பிரசாதம் இப்படி எதுவானாலும், "ஹை டோஸ்" மயக்க மாத்திரைகளை தெரியாமல் கலந்து தந்துவிடுவாராம்.

இது தெரியாமல் அவர்களும், புஜ்ஜி தருவதை வாங்கி சாப்பிட்டுவிட்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிடுவார்கள்.. அந்த நேரத்தில், அவர்களது உடலிலுள்ள தங்க நகைகள், பணம், பீரோவில் உள்ள நகைகளை திருடிவிடுவார்.. பிறகு திருடிய பணத்தை தன்னுடைய பேங்க்கில் போட்டுவிடுவார்.. நகைகளை தனியார் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து, பணத்தை பெற்று கொள்வார்.

திருட்டுகள்: மயக்கம் தெளிந்ததுமே, அந்தந்த ஓனர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரவர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஓடுவார்களாம்.. இதனால், காக்கிநாடா மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தனுகு மற்றும் தாடேபள்ளிகுடம் போலீஸ் ஸ்டேஷன்களில் இதுபோல ஏகப்பட்ட திருட்டு சம்பவங்கள் அடுத்தடுத்து குவிந்துவிட்டன..

எல்லாமே ஒரே மாதிரியான புகார்களாகவே இருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்கள் எல்லாருமே, தங்கள் வீட்டில் வேலை செய்த புஜ்ஜி மீதுதான் சந்தேகம் என்று அழுத்தமாக சொன்னார்கள்.

இதையடுத்து, போலீசார் புஜ்ஜியை பிடிக்க தீவிரமானார்கள்... இது தொடர்பான தீவிர விசாரணையையும் மேற்கொண்டனர்.. அப்போதுதான், ராஜமுந்திரி பொம்மூரில் புஜ்ஜியின் வீடு இருப்பது தெரியவந்தது.

அதிரடி கைது: பிறகு போலீசார், திடீரென புஜ்ஜி வீட்டுக்குள் நுழைந்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். 273.8 கிராம் தங்கத்தை அவரிடமிருந்தும் பறிமுதல் செய்துள்ளனர்.

அப்போதுதான் புஜ்ஜியை நேரில் கண்டு அதிர்ந்தனர்.. காரணம், ஏற்கனவே இப்படித்தான் புஜ்ஜி, இதே மாதிரியான திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போனாராம்.. கடந்த 2021-ல் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ஆனால், மறுபடியும் இதே திருட்டு தொழிலில் ஈடுபட்டு, அதே பாணியை கடைப்பிடித்திருக்கிறார்.

போலீஸ் அலர்ட்: இதையடுத்து, போலீசார், பொதுமக்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறியுள்ளார்கள்.. இந்த பெண்ணிடம் இனிமேலாவது கவனமாக இருங்கள் என்றும் கேட்டுக் கொண்டு, புஜ்ஜியின் போட்டோவையும் வெளியிட்டு எச்சரித்திருக்கிறார்கள்..

ஆனால், இதுவரை புஜ்ஜி, வீட்டு வேலை செய்த இடங்களிலெல்லாம் மயக்க மருந்து தந்துதான் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்.. ஆனால், அந்த மயக்க மருந்து, அதுவும் ஹைடோஸ் மாத்திரைகள் எங்கிருந்து புஜ்ஜிக்கு கிடைத்தன என்று தெரியவில்லை..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+