சைதன்யா- நிஹாரிகா விவாகரத்து.. கிளப் பப்பே கதி என கிடந்த மருமகள்.. மாமனார் அளித்த பரபரப்பு தகவல்கள்?
ஹைதராபாத்: நடிகையும், சிரஞ்சீவியின் தம்பி மகளுமான நிஹாரிகா அவருடைய கணவர் சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை நிஹாரிகாவும் சைதன்யாவும் காதலித்து 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 5 ஆண்டுகளாக காதலித்த நிலையில் இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்தது. இந்த விழாவில் வருண் தேஜ், ராம் சரண், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிஹாரிக்கா ஒக்க மனசு எனும் படத்தில் 2016 ஆம் ஆண்டு நடித்திருந்தார். நடிகையாவதற்கு முன்பு டிவி சேனலில் ஆங்கராகவும் பிரபலமானவர். பிங்க் எலிஃபேன்ட் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும் நிஹாரிகாதான். சைதன்யா ஹைதராபாத்தில் உள்ள ஒரு பன்னாட்டு கார்பரேட் நிறுவனத்தில் பிசினஸ் ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டாக உள்ளார்.

இவரது வாழ்க்கையும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக கடந்தது. ஆனால் இவர்களுக்குள் சில மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடலாம் என எண்ணி ஏப்ரல் 1 ஆம் தேதி குகட்பள்ளி குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு மனு அளித்தனர். இருவருக்கும் மீண்டும் சேர்ந்து வாழ சந்தர்ப்பம் கொடுத்த போதிலும் அவர்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து கடந்த ஜூன் 5ஆம் தேதி இருவருக்கும் அந்த குடும்ப நீதிமன்றம் விவாகரத்து கொடுத்தது. இதையடுத்து நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை அறிவித்தார். சிரஞ்சீவி குடும்பத்தில் விவாகரத்து பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த நிலையில் இவர்களுடைய பிரிவுக்கு நிஹாரிகாவின் தந்தை நாகேந்திர பாபுதான் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறார்.
நாகேந்திர பாபு தனது மகளை மிகவும் செல்லமாக வளர்த்துவிட்டார். திருமணத்திற்கு பிறகு புகுந்து வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவருக்கு அவரது தந்தை சொல்லிக் கொடுக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து போவதில் நிஹாரிகா கடினமாக கருதினார். சைதன்யாவும் அவரது தாயும் , நிஹாரிகாவுக்கு அதிகளவு முட்டுக் கட்டை போட்டனர். இதனால் நிஹாரிகாவின் சினிமா தொழில் பாதிக்கப்பட்டதாம்.
இதில் சில வாக்குவாதங்கள் முற்றியதை அடுத்து இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிடுவதாக அறிவித்ததை அடுத்து விவாகரத்து செய்துவிட்டனர். சைதன்யா ஓய்வு பெற்ற ஐஜி பிரபாகரின் மகனாவார். இந்த விவாகரத்து விவகாரத்தை சைதன்யா சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் மன உளைச்சலால் யோகா, ஆன்மீகம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவர்களது விவாகரத்துக்கான காரணம் பொதுவெளியில் தெரியாவிட்டாலும் சைதன்யாவின் தந்தை தனது நண்பர்களிடம் காரணம் என்ன என கூறியதாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் நிஹாரிகா மாமனார் உள்பட வீட்டில் உள்ளவர்களை மதிப்பதே இல்லையாம். கணவரிடம் கூட அன்பாக இல்லாமல் எப்போது பார்த்தாலும் கிளப்புக்கும் பப்புகளுக்கும் செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தாராம்.
நிஹாரிகா குறித்து உண்மை தெரியாமல் அவருடைய ரசிகர்கள் தன் மகனை விமர்சித்து வருவதாக வேதனை தெரிவித்தாராம். இதெல்லாம் தெலுங்கு மீடியாக்களில் வெளியான தகவல்கள், இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை. இவர்கள் பஞ்சாயத்து ஓய்ந்த நிலையில் பவன் கல்யாண் தற்போது 3ஆவது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications