அடுக்குமாடி வீட்டில் ஜாலியோ ஜாலி.. கரெக்ட்டா வந்துநின்ற மனைவி.. கட்டிலிலேயே புரட்டியெடுத்து.. வீடியோ
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கள்ள ஜோடி கையும் களவுமாக அகப்பட்டுள்ளது.. இது தொடர்பான வழக்கு விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி சோடவரம் எல். சிங்கவரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஹரிதா... இவர் விவேக் என்பவரை காதலித்து வந்தார்.. ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டாவை சேர்ந்தவர் இந்த விவேக்.

இருவருமே தீவிரமாக காதலித்து வந்த விவகாரம், இரு வீட்டு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது.. இதையடுத்து, பெரியவர்கள் முன்னிலையில் கடந்த 2020ம் ஆண்டு வெகுசிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது.
குடும்ப வாழ்க்கை: தம்பதியினர் இருவருமே மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தனர்.. ஆனால், ஒரு வருட காலமே இந்த மகிழ்ச்சி நீடித்திருக்கிறது.. அதற்கு பிறகு தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வெடிக்க துவங்கியது.
திடீரென மனைவியை விவேக்குக்கு பிடிக்காமல் போய்விட்டது.. மனைவி உயரம் குறைவாக இருப்பதாக சொல்லி பிரச்சனையை கிளப்பினார்.. பிறகு புது புது காரணங்களை சொல்லிய விவேக், தனக்கு விவாகரத்து வேண்டும் என்று மனைவி ஹரிதாவிடம் துளைத்தெடுக்க துவங்கினார்.. ஆனால், கணவன் எதற்காக தன்னை வெறுக்கிறார்? காரணமே தெரியாமல் ஏன் தகராறு செய்கிறார்? என்று தெரியாமல் ஹரிதா விழித்து வந்துள்ளார்.

கள்ளக்காதல்: இப்படிப்பட்ட சூழலில்தான் மற்றொரு புயல், குடும்பத்தில் கிளம்பியது.. விவேக் அடிக்கடி ஸ்பாவிற்கு சென்று வருவாரொம்.. அப்போதுதான், மாதுரி என்ற பெண் விவேக்குக்கு அறிமுகமாகியிருக்கிறார்.. இந்த பழக்கம், கள்ளக்காதல் வரை சென்றிருக்கிறது.. ஒருகட்டத்தில் மாதுரியின் அழகிலேயே மயங்கி கிடந்த விவேக், மாதுரிக்கு ஸ்கூட்டி, நகைகள், காஸ்ட்லி பொருட்களை என பலவற்றை கிஃப்ட் தந்திருக்கிறார்.
இந்த விஷயம், மனைவி ஹரிதாவுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதைப்பற்றி கணவரிடம் கேட்டதற்கு, மாதுரியுடனான நட்பை கைவிட முடியாது என்று சொன்னாராம். அத்துடன், விவாகரத்து விவகாரத்தை இன்னும் தீவிரமாக்கினாராம். இதையே சாக்காக வைத்து, விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டார்.. அத்துடன், மனைவியை பிரிந்து, விசாகப்பட்டினத்தில் சீதம்தாராவில், அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருக்கும் மாதுரியுடனேயே வந்து தங்கிவிட்டார் விவேக்.

சிக்கிய ஜோடி: இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த ஹரிதா, இந்த ஜோடியை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.. இதற்காக உறவினர்களுடன், மாதுரியின் அப்பார்ட்மென்ட்டுக்கே கிளம்பி சென்றார்..
அந்த வீட்டிற்குள் நுழைந்து, மாதுரியுடன் கட்டிலில் ஜாலியாக இருந்த விவேக்கை கையும் களவுமாக பிடித்தார்... அத்துடன், விவேக்கையும், - மாதுரியையும் அங்கேயே கட்டிலின் மீதே வைத்தே சரமாரியாக வெளுத்தெடுத்தார்.. மாதுரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார்.. ஒருகட்டத்தில் வலி பொறுக்க முடியாத மாதுரி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்..
முறையீடு: இப்போது விவேக் மட்டும் வசமாக சிக்கிவிட்டதால், அவரை விசாகப்பட்டினம் புச்சய்யாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்ற ஹரிதா, தனக்கு நியாயம் பெற்று தர வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.. ஆனால் ஏற்கனவே, விவேக் தொடுத்துள்ள விவாகரத்து கேஸ், கோர்ட்டில் இருப்பால், நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையிடும்படி சொல்லி உள்ளார்களாம்.
கட்டிலின் மீது வைத்தே, கணவனையும், கள்ளக்காதலியையும் மனைவி கோபத்தில் தாக்கும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications