"தனிமை"யில் வரலட்சுமி.. கைகொடுத்த ஜெகதீஷ்.. 3 வயது குழந்தையை மயானத்தில் புதைத்து.. அலறிய ஆந்திரா..!
ஆந்திர பிரதேசத்தில் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்
ஹைதராபாத்: நம்ம ஊரில் ஒரு அபிராமி இருக்கிறாரே.. அதுபோலவே, ஆந்திராவிலும் ஒரு அபிராமி இருக்கிறார்.. காதலன் மீதுள்ள ஓவர் ஆசையால், தன்னுடைய 3 வயது பெண் குழந்தையை கொன்று, மயானத்தில் சடலத்தை புதைத்தும்விட்டார்..!
தொற்றை எப்படி குறைப்பது, பலி எண்ணிக்கையை எப்படி மட்டுப்படுத்துவது, இந்த கொரோனாவை எப்படி ஒழித்து கட்டுவது என மத்திய, மாநில அரசுகள் கவலையில் இருந்தால், மற்றொரு பக்கம் வன்முறை சம்பவங்கள் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த லாக்டவுன் நேரத்திலும் இதற்கு பஞ்சமில்லை.. இந்த கொடுமையில் பெண்களே ஈடுபட்டு வருவது அதைவிட ஷாக் தருகிறது.

லாக்டவுன்
விசாகப்பட்டினத்தில் மரிக்கவலச என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர்தான் வரலட்சுமி.. கணவன் பெயர் ரமேஷ்.. ஆனால், அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.. 3 வயதில் சிந்துஸ்ரீ என்ற பெண் குழந்தை இருக்கிறது.. எனினும், அதே கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருடன் வரலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது.. இந்த தொடர்பு தகாத உறவில் கொண்டு போய் நிறுத்தியது.

குழந்தை
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, வரலட்சுமியின் 3 வயது குழந்தை திடீரென இறந்துவிட்டாள்.. போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்படாமல், சடலத்தையும் புதைத்துவிட்டனர்.. 2 நாளைக்கு முன்பு, கணவனுக்கு போன் செய்து, குழந்தை இறந்துவிட்டாள், அதனால் நானே மயானத்தில் புதைத்து விட்டேன் என்று கேஷூவலாக சொல்லி உள்ளார். இதனால் ரமேஷ் கதறி துடித்தார்.. உடனடியாக போலீசில் இதை பற்றி சொன்னார்.

நடவடிக்கை
அதேசமயம், குழந்தையின் மரணத்தில் கிராம மக்களுக்கும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.. வரலட்சுமியின் நடவடிக்கைகளை கண்டு, ஒருவேளை பெற்ற மகளை, அவரே கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்தனர்.. தங்களுடைய சந்தேகத்தையும் போலீசாரிடம் சொன்னார்கள்.

கிராமம்
போலீசாரும் அந்த கிராமத்திற்கு வந்து, வரலட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், கள்ளக்காதலுக்கு குழந்தை இடைஞ்சலாக இருந்ததால் கொன்று புதைத்துவிட்டதாக வரலட்சுமி சொன்னார்.. இதையடுத்து, அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முயன்றனர்...

ஆவேசம்
ஆனாலும் பொதுமக்கள் ஆவேசமடைந்துவிட்டனர்.. போலீஸ் ஜீப்பை வழிமறித்து ஒட்டுமொத்த கிராம மக்களும் நின்று கொண்டனர்.. "கள்ளக்காதலுக்காக மகளை படுகொலை செய்து வரலட்சுமியை, இங்கேயே, இப்பேவே என்கவுண்டர் செய்தாக வேண்டும், உங்களால் முடியாவிட்டால், எங்ககிட்ட விட்டுட்டு போங்க.. நாங்களே பார்த்துக்கறோம்" என்று போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சமாளிப்பு
இதனால் அந்த இடமே பரபரப்பானது.. போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.. போலீசார் வாகனத்தையும் பொதுமக்கள் நொறுக்கினர்.. நீண்ட நேரம் கழித்து, பொதுமக்களை போலீசார் ஒருவழியாக சமாளித்து, சமாதானம் செய்தனர்.. உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் உறுதி சொன்னார்கள்.. அதன்பிறகே, வரலட்சுமியை ஜீப்பில் அழைத்து செல்ல வழிவிட்டனர்.. ஜெகதீஷ், வரலட்சுமி இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications