நாகசைதன்யாவுடனான விவாகரத்து! சொன்னது தவறு! நடிகை சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர் சுரேகா
விசாகப்பட்டினம்: எனது கருத்துகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதை நிபந்தனையின்றி வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவிடம் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து அமைச்சர் சுரேகா மோசமான கருத்துகளை கூறியிருந்ததற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர். மேலும் தங்கள் விவாகரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த விவகாரம் பெண் அமைச்சர் சுரேகாவிற்கு எதிராக திரும்பியது, மேலும் ராமராவ், சுரேகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து அவர் தனது கருத்துகளை வாபஸ் பெற்றுள்ளார்.
நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு: இதுகுறித்து அமைச்சர் சுரேகா கூறியிருப்பதாவது: சமந்தா! எனது கருத்துகள் ஒரு தலைவர், பெண்களை இழிவுப்படுத்துவதை கேள்வி கேட்பதற்காகவே தவிர, உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் எனக்கு மட்டும் போற்றுதலுக்குரியதாக இல்லை. நீங்கள் அனைவருக்குமே ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறீர்கள்.

வருந்துகிறேன்: எனது கருத்துகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ மனம் புண்பட்டிருந்தால் அந்த கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெறுகிறேன். அரசியல் கண்ணோட்டத்திலோ அல்லது வேறுவிதமாகவோ இதை பெரிதாக்க வேண்டாம். இவ்வாறு சுரேகா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சுரேகா கூறியிருப்பதாவது: என்னுடைய அரசியல் பயணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக யாருடைய குடும்பப் பிரச்சினை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது இல்லை. நான் சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்தவில்லை. நான் எப்போதும் அடிப்படையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை என்றார்.
யார் இந்த சுரேகா: தெலுங்கானா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்து வரும் சுரேகா கூறிய கருத்துகள்தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். நாக சைதன்யா விரைவில் சோபிதாவை திருமணம் செய்யவுள்ளார். சமந்தா இரண்டாம் திருமணம் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.
சர்ச்சை பேச்சு: இந்த சூழலில்தான் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமராவ்தான் காரணம் என தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனால் சமந்தாவும் கோபமடைந்து, என்னை பற்றி தவறான கருத்துகளை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணாக வெளியே வந்து பணி செய்து பெண்களை முட்டுக்கட்டைகளாக கருதாத ஒரு துறையில் நான் சாதித்து வாழவும் காதலில் விழவும், காதலை விலக்கிக் கொள்ளவும் எனக்கு தேவையான தைரியம் உண்டு.
சமந்தா பதிலடி: இந்த பயணத்தை அமைச்சர் சுரேகா சிறுமைப்படுத்த வேண்டாம். ஒரு அமைச்சராக நீங்கள் என் விவாகரத்து குறித்து கூறியிருக்கும் கருத்துகள் உங்கள் பதவிக்கு அழகல்ல. எப்போதுமே ஒருவரின் தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். விவாகரத்து என்பது எனது தனிப்பட்ட விஷயம். இது குறித்து உங்கள் யூகங்களை தவிர்க்க வேண்டும். என் பெயரை கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.
நாகசைதன்யா கண்டனம்: அதுபோல் நாக சைதன்யாவும், அமைச்சர் சுரேகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நாங்கள் இருவரும் பரஸ்பர முடிவு செய்து விவாகரத்து செய்துவிட்டோம். இந்த விவகாரத்தில் பல்வேறு ஆதாரமற்ற கருத்துகள் வந்துள்ளன. எனது முன்னாள் மனைவி, எனது குடும்பத்தினர் மீதான மரியாதை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.
அமைச்சர் சுரேகாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அது முற்றிலும் கேலிக்குரியது. இதை ஏற்கவே முடியாது. ஊடகத் தலைப்புச் செய்திகளில் வருவதற்காக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை சாதகமாக்கிக் கொள்வது வெட்கக் கேடானது என நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications