வேலை நேரத்தில் டிக்டாக்.. சினிமா நடிகையை மிஞ்சிய பெண் ஊழியரால் பரபரப்பு!
Recommended Video
ஹைதராபாத்: மாநகராட்சி அலுவலகத்தை சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிய அலுவலர்களால் தெலங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாநகராட்சி அலுவலக அதிகாரிகள் பணி நேரத்தில் டிக் டாக் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு/இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பிரிவில் அனிதா, ஜோதி, வீரன்னா, ரவி ஆகியோர் அலுவலர்களாக பணியாற்றி வருகிறார்கள். நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் சான்றிதழ்களுக்காக விண்ணப்பித்து அதை வாங்கி செல்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருக்கும் நிலையில், பணியின் போதே மும்முரமாக டிக் டாக் வீடியோ எடுத்து அதை வெளியிட்டார் அனிதா என்ற அலுவலர்.
இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, விஷயம் தெலுங்கானா முதலமைச்சர் வரை சென்றுவிட்டது. சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவத்தை இணையத்தில் வறுத்து எடுத்துவிட்டனர். இதையடுத்து கம்மம் மாநகராட்சி ஆணையர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனிடையே அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களுக்கு உள்ள கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்படவேண்டும் என தெலுங்கானா அரசு அட்வைஸ் செய்துள்ளது. டிக்டாக் பண்ணுங்க.. வீட்டில் வச்சு பண்ணுங்க.. ஜாலியா பண்ணுங்க.. வேலையை விட்டுட்டு பண்ணினா எப்படிம்மா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications