திருப்பதிக்கு வந்த சர்ப்ரைஸ் கிப்ட்.. மகா துவாரம் முன்பு சென்னை தொழிலதிபர் செய்த அசத்தல் காரியம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உலக புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி திருமலைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், திருமலையில் உள்ளூர் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, சென்னையைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவர் மிக பிரம்மாண்டமான உதவிக் கரத்தை நீட்டியுள்ளார். ஏழுமலையான் மீது கொண்டுள்ள அசாத்திய பக்தியால், பக்தர்களின் இலவச பயணத்திற்காக அவர் எலக்ட்ரிக் பஸ் தந்து, மெகா உபயம் செய்துள்ளது திருப்பதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமான திருப்பதி திருமலைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

Tirumala

இப்படி வரும் பக்தர்களின் வசதிக்காகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் இலவச போக்குவரத்து வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.. அந்த வகையில், திருமலையில் உள்ள உள்ளூர் பகுதிகளில் பக்தர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அலைச்சலின்றி எளிதாக சென்று வர தேவஸ்தானம் புதிய முடிவுகளை எடுத்து வருகிறது..

திருமலை திருப்பதி கோயில்

இந்நிலையில், திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சென்னையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், வர ஃபயூச்சர் எல்எல்பி (Vara Future LLP) நிறுவனத்தின் தலைவருமான வர்த்தமான் ஜெயின் என்பவர், திருப்பதி ஏழுமலையான் மீது கொண்டுள்ள அசாத்திய பக்தியின் காரணமாக ஒரு மிகப்பெரிய காரியத்தை செய்துள்ளார்.. திருமலையில் உள்ள உள்ளூர் பகுதிகளில் பக்தர்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய ஏதுவாக, ஒரு நவீன எலக்ட்ரிக் பேருந்தை (Olectra Electric Bus) தேவஸ்தானத்திற்கு முழு உபயமாக வழங்கியுள்ளார்.

எலக்ட்ரிக் பஸ் தந்த பக்தர்

இந்த எலக்ட்ரிக் பேருந்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு சனிக்கிழமை அதிகாலை வேளையில் திருமலையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது..

இதற்காக சென்னை தர்மகர்த்தா வர்த்தமான் ஜெயின் தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வருகை தந்து, அந்த புதிய எலக்ட்ரிக் பேருந்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயத்தின் மகா துவாரம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார்.. அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, வாகனத்திற்கு கற்பூர ஆராதனை காட்டி, தேங்காய் உடைத்து புனித நீர் தெளித்து பூஜைகளை மிக நேர்த்தியாக செய்து முடித்தனர்.

இந்த ஆன்மீக நிகழ்வைத் தொடர்ந்து, பேருந்துக்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் சாவியை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரியிடம் அவர் முறைப்படி நேரில் வழங்கினார்..

சாவி & ஆவணங்கள்

சாவி மற்றும் ஆவணங்களை பெற்றுக் கொண்ட தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, சென்னை பக்தர் வர்த்தமான் ஜெயினுடன் அதே எலக்ட்ரிக் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து சிறிது தூரம் பயணம் செய்து சோதனை ஓட்டத்தை பார்வையிட்டார்.

இந்த பயணத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி, இந்த எலக்ட்ரிக் பேருந்து மிகவும் சொகுசான அமைப்பைக் கொண்டிருப்பதாகவும், திருமலையில் மாட வீதிகள் மற்றும் தங்குமிடங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு மிகச்சிறந்த மற்றும் சௌகரியமான பயண அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும் என்றும் மனதார பாராட்டி பேசினார்.

தேவஸ்தானம் போர்டு

மேலும், இந்த பஸ் முழுக்க முழுக்க பக்தர்களை இலவசமாக ஏற்றிச் செல்வதற்காக மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது..

இந்த சிறப்பான எலக்ட்ரிக் பேருந்து வழங்கும் நிகழ்வின் போது, திருப்பதி ஆலயத்தின் துணை நிர்வாக அதிகாரி லோகநாதம், தேவஸ்தான முன்னாள் போர்டு மெம்பர் அனந்தா மற்றும் திருமலை போக்குவரத்து பிரிவு அதிகாரி கிருஷ்ணையா உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

திருப்பதி மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் பொருட்டு தேவஸ்தான நிர்வாகம் ஏற்கனவே பல்வேறு இயற்கை சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சென்னை பக்தர் வழங்கிய இந்த சூழல் நட்பு மின்சார பேருந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+