"உன் புருஷன் என்ன வேலை பார்க்கிறாரு".. தாங்க முடியாத அவமானத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்
திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
ஹைதராபாத்: "உன் புருஷன் என்ன வேலை பார்க்கிறாரு" என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாத
ஜான்சி தூக்கு போட்டு தற்கொலையே செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜான்சி.. அதே பகுதியை சேர்ந்தவர் சாய் தேஜா.. மிக தீவிரமான காதலர்கள்.. ஆனால் இந்த காதலை இரு வீட்டினரும் ஏற்கவில்லை. யாருக்கும் ஒருவரையொருர் பிடிக்கவும் இல்லை.

ஆனாலும் எல்லோரையும் மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 4 மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் ஆனது.. ஜான்சி - தேஜா இருவரும் அவரவர் வீட்டை விட்டு வெளியே தனியாக வீடு எடுத்து தங்கினர்... பிள்ளைகளை பாசமாக வளர்த்துவிட்ட பெற்றோர்களோ, மனசு கேட்காமல் இவர்களை வந்து ஏற்றுக் கொண்டு அரவணைத்தனர். சில தினங்களகுகு முன்புதான் இரு குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்தனர்.
தேஜாவை பொறுத்தவரை வீட்டில் ரொம்ப செல்லம்.. ஒரே மகன்.. ஓவர் செல்லத்தால், வேலை வெட்டிக்கு போகாமலேயே விட்டுவைத்திருந்து இருக்கிறார்கள்.. திடீரென கல்யாணம் ஆகிவிடவும் எந்த வேலைக்கு, எப்படி போவது என்று தெரியாமல் இருந்தார்.. எப்பவுமே வீட்டிலேயே முடங்கி கிடந்த தேஜாவை பார்த்து ஜான்சி வருத்தப்பட்டார்.
ஏதாவது ஒரு வேலைக்கு போகுமாறு சொன்னார்... ஆனால் வேலைக்கு போக எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி உள்ளார்... இரு வீட்டு பெற்றோரும், "கம்மியான சம்பளம் இருந்தாலும் பரவாயில்லை.. பேருக்கு ஒரு தேஜாவை வேலைக்கு போனால் போதும்" என்று அட்வைஸ் தந்தனர்.. இது தேஜாவுக்கு பிடிக்கவில்லை.. யாரெல்லாம் வேலைக்கு போக சொல்கிறார்களோ, அவர்களுடன் தகராறு செய்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தேஜாவின் குடும்பத்தினர் எல்லோரும் சினிமாவுக்கு கிளம்பினர்.. தேஜாவையும் வருமாறு கூப்பிட்டார்கள்.. 'நீங்க முன்னாடி போங்க. நான் பின்னாடி வருகிறேன்' என்று சொல்லி லேட்டாக தியேட்டருக்கு போயிருக்கிறார்.. இதனால் தியேட்டரில் தந்தை-மகனிடையே சண்டை வந்துள்ளது.. அந்த ஆத்திரத்தில் வீட்டுக்கு வந்த தேஜா, தூங்கி கொண்டிருந்த ஜான்சி கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்து கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார்.
ஏற்கனவே வேலைக்கு போகாத கணவனை நினைத்து வருந்திய ஜான்சி, செயினை அறுத்து கொண்டு போனதை நினைத்து கண்ணீர் விட்டார்.. சோகத்தில் கதவை பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டார். சினிமாவுக்கு போய்வந்தவர்கள் ஜான்சி பிணமாக தொங்குவதை கண்டு அலறினர்.. போலீசாரும் விரைந்து வந்து இதுசம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications