கொடுமை.. வெறும் 2 ரூபாய்க்கு நடந்த சண்டை.. கடைசியில் ஒரு கொலை.. ஆந்திராவில்!
2 ரூபாய்க்கு நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார்
ஹைதராபாத்: வெறும் 2 ரூபாய்க்கு சண்டை நடந்துள்ளது.. இந்த சண்டை ஒரு கொலை வரை சென்று முடிந்துள்ளது.. ஆந்திராவில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது வலசபாகலா என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் சுவர்ணராஜூ. 24 வயதாகிறது. கட்டிட வேலை செய்து வந்தவர்..

இந்நிலையில், நேற்று, சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காற்று இறங்கிவிட்டது. அதனால், அங்கிருந்த ஒரு சைக்கிள் கடைக்கு சென்ற அவர், சைக்கிள் டயருக்கு காற்று அடித்துள்ளார். சைக்கிள் கடைக்காரர் சம்பா, காற்று அடித்துமுடித்துவிட்டு, 2 ரூபாய் கேட்டிருக்கிறார்.
ஆனால், தன்னிடம் 2 ரூபாய் இல்லை என்று அப்போதுதான் சுவர்ணராஜுக்கு தெரிந்துள்ளது. அதனால் 2 ரூபாய் இல்லை, அப்பறமா வந்து தருகிறேன் என்று சொல்லி உள்ளார். இதுதான் சண்டையாக ஆரம்பமாகி, கைகலப்பாக உருவானது. ஒரு கட்டத்தில், சுவர்ண ராஜூ, கடைக்காரர் சம்பாவை தாக்கியதாக தெரிகிறது.
இதை பார்த்து சம்பாவின் நண்பர் அப்பாராவ் ஆத்திரமடைந்தார். அதனால் கடைக்குள் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, சுவர்ணராஜூவின் தலையில் பலமாக தாக்கினார். இதில், ரத்தம் கொட்டி சுவர்ணராஜூ சுருண்டு விழுந்தார். இதை பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் உடனடியாக காக்கிநாடா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
அதற்குள் அப்பாராவ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு, சைக்கிள் கடைக்காரர் சம்பாவை கைது செய்து, அப்பா ராவை தேடி வருகின்றனர். 2 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications