மின்கசிவு காரணமாக நவி மும்பை ஓட்டலில் தீ விபத்து: ஒருவர் பலி 30 பேர் காயம்
மும்பை: மும்பையில் மூன்று மாடிக் கட்டிட ஓட்டல் ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவி மும்பையின் வாஷி பகுதியில் ஃபாம் கடற்கரை சாலையில் 26வது செக்டரில் உள்ள மூன்று மாடிக் கட்டிட ஓட்டலில் இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் நான்கு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த 30 பேர் மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவர்களில் 20 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கி ஊழியர்கள் கருத்தரங்களில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஏராளமாக வங்கி ஊழியர்கள் இந்த ஓட்டலில் தங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications