ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதி ஒருவருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக காஷ்மீருக்குள் 60க்கும் மேற்பட்ட தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த் வாரா பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த மோதலில் ராணுவ ஜவான் ஒருவரும் காயம் அடைந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வேறு ஏதேனும் தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியுள்ளனரா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications