கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி.. ஆந்திரா வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் பக்தர்கள் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்காவில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஷ்வராக சுவாமி கோவிலில் இன்று திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் புகழ்பெற்றது. ஆந்திரா மட்டுமின்றி தெலுங்கானா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

stampede andhra pradesh kasibugga

இன்று சனிக்கிழமை என்பதால் கோவிலுக்கு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வருகை தந்தனர். விரைவில் கார்த்திகை மாதம் பிறக்க உள்ளது. ஏகாதசி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பக்தர்கள் இன்று அதிகளவில் கூடினர்.

அப்போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பெண்கள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனைகளின் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+