2020-க்குள் சிறு நகரங்களுக்கும் விமானச் சேவை: பிரதமர் மன்மோகன்சிங் உறுதி
ஆஜ்மீர்: மேலும் 30 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், வரும் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
நேற்று முந்தினம் ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மீர் அருகேயுள்ள கிஷான்கர் நகரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்....

மத்திய அரசு திட்டம்....
"இந்தியாவில் இப்போது பெரிய நகரங்களில் மட்டுமே விமான நிலையங்கள் உள்ளன. இந்த நிலையை மாற்றி சிறிய நகரங்களையும் விமானச் சேவை மூலம் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

100 சிறிய நகரங்களில் விமானநிலையங்கள்....
இதன்படி, வரும் 2020-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறிய நகரங்களில் விமான நிலையங்களை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம்

முதல்கட்டமாக கிஷான்கர் நகரில்....
முதல்கட்டமாக முஸ்லிம்களின் புனித தலமான ஆஜ்மீர் அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிஷான்கர் நகரில் விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் 2016-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும்.

மேலும், 30 கோடி மக்கள்....
கடந்த ஓராண்டில் 16 கோடி இந்தியர்கள் விமானச் சேவையை பயன்படுத்தியுள்ளனர். சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைப்பதன் மூலம் 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 கோடியாக அதிகரிக்கும்' எனப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

தரம் உயர்த்த நடவடிக்கை....
விழாவில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங் பேசும்போது, ‘சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, அவற்றை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications