பீகார்: நிதிஷ்குமாருக்கு மரண அடி? 12 ஜேடியூ எம்எல்ஏக்கள் எஸ்கேப்? 20 பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி?
பாட்னா: பாஜகவுடன் இணைந்து மீண்டும் புதிய ஆட்சி அமைக்கலாம்; தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓடலாம் என கணக்குப் போட்டிருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அவரது ஜேடியூவின் 12 எம்.எல்.ஏக்களும் பாஜகவின் 20 எம்.எல்.ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.
பீகாரில் 2020-ம் ஆண்டு பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார் நிதிஷ்குமார். 2022-ம் ஆண்டு பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு லாலுவின் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் மற்றொரு புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார் நிதிஷ்குமார்.

தற்போது லாலுவின் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணியை உதறிவிட்டு மீண்டும் பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வராக திட்டமிட்டுள்ளாராம் நிதிஷ்குமார். இதற்காக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்ட நிதிஷ், இன்று தமது பதவியை ராஜினாமா செய்வார்; நாளை பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைப்பார் என கூறப்பட்டு வருகிறது.
ஆனால் நிதிஷ்குமாருக்கு மரண அடி தரும் வகையில் அவரது சொந்த கட்சியான ஜேடியூ எம்.எல்.ஏக்கள் 12 பேர், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம். இந்த 12 எம்.எல்.ஏக்களை நிதிஷ்குமார் தரப்பு தொடர்பு கொள்ள முடியாமல் தத்தளித்து வருகிறதாம். இந்த 12 பேரும் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தால் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் பெரும்பான்மை பலத்துடன் முதல்வராகிவிட முடியும் என்பது ஒரு கணக்கு.
இன்னொரு பக்கம், நிதிஷ்குமாரை மீண்டும் கூட்டணியில் சேர்க்கவே கூடாது என பாஜகவிலேயே 20 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனராம். இந்த 20 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ்- ஆர்ஜேடியுடன் கை கோர்க்கவும் தயாராக இருக்கின்றனராம். நிதிஷ்குமாரின் கண்ணா மூச்சி விளையாட்டு கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது டெல்லி பாஜக மேலிடத்தை அதிர வைத்திருக்கிறதாம். இதனையடுத்து டெல்லியிலும் பாட்னாவிலும் அவசர ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. பீகார் அரசியலில் நிமிடத்து நிமிடம் பரபரப்பு அதிகரித்து கொண்டே இருப்பது தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications