திறந்திருந்த சாக்கடையில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி; சுற்றுலா முடிந்து திரும்பிய போது பரிதாபம்!
டெல்லி: சாலையில் திறந்து கிடந்த சாக்கடையில் விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மில்லினியம் பஸ் டிப்போ அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பள்ளிச் சுற்றுலா முடிந்து நண்பர்களுடன் பேசியபடி நேற்று மாலை 3 மணியளவில் இந்த சாலையில் நடந்து சென்றுள்ளான் லபியான்ஸ் என்ற 12 வயது சிறுவன்.

அப்போது சாலையில் திறந்து கிடந்த சாக்கடைக் குழியை அவன் கவனிக்கவில்லை. இதனால் எதிர்பாராதபடி அந்தக் குழியில் அச்சிறுவன் விழுந்துள்ளான்.
மற்றவர்கள் உதவிக்கு வருமுன்னரே அச்சிறுவன் மூழ்கி விட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சாக்கடையில் மூழ்கிய அச்சிறுவனின் உடலை மீட்டனர்.
போலீசாரின் விசாரணையில், அந்தச் சாக்கடையானது சுத்தம் செய்வதற்காக திறந்து வைக்கப் பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால், ஊழியர்கள் யாரும் அதன் அருகே இல்லாததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
லபியான்ஸின் தந்தை கடந்த வருடம் உயிரிழந்து விட, அவரது தாயார் வீட்டு வேலை செய்து மகனைப் படிக்க வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications