500 ரூபாய்க்காக மாணவிகளை நிர்வாணமாக்கிய ஆசிரியை!: போலீஸ் வலைவீச்சு
அமிர்தசரஸ்: பாஞ்சாப் மாநிலத்தில் 500 ரூபாய் காணாமல் போனதற்காக வகுப்பு மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார் ஆசிரியை ஒருவர். இந்த சம்பவத்தால் கொதித்து போன பெற்றோர்கள் போலீசில் புகார் தெரிவிக்கவே ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் உள்ள அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றுபவர் ஹர்ஜித்கவுர். இவர், 7 ஆம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்றபோது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் காணாமல் போயுள்ளது.

அந்த பணத்தை வகுப்பு மாணவிகளில் யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்ட ஹர்ஜித்கவுர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
ஆனால், அந்த பணத்தை தாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று மாணவிகள் மறுத்தனர். ஆனாலும் அதை விடாத ஆசிரியை 13 மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த மாணவிகள் இதுபற்றி தங்களது பெற்றோரிடம் கூறி அழுதனர். இதில் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இதைக்கேள்விப்பட்ட உடன் அந்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் ஹர்ஜித் கவுரை தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications