குஜராத்: கம்பத் பகுதியில் மீண்டும் இரு சமூகங்களிடையே மோதல்- 13 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

கம்பத்: குஜராத்தின் கம்பத் பகுதியில் மீண்டும் இரு சமூகங்களிடையே மோதல் வெடித்தது. இதில் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இச்சம்பவங்களில்13 பேர் படுகாயமடைந்தனர்.

Recommended Video

    செய்தி தெரியுமா | 24-02-2020 | Oneindia tamil Morning news

    குஜராத்தின் அனந்த் மாவட்டம் கம்பத் தாலுகா அக்பர்பூரில் கடந்த மாதம் இரு சமூகங்களிடையே திடீர் மோதல் வெடித்தது. அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வினு சாவ்தா என்பவர் பலியானார்.

    13 injured in communal clash at Khambhat, Gujarat

    இந்நிலையில் மீண்டும் நேற்று அக்பர்பூரில் இரு சமூகங்களிடையே மோதல் வெடித்தது. இருதரப்பும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    பல இடங்களில் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இச்சம்பவங்களில் மொத்தம் 13 பேர் படுகாயமடைந்தனர். இம்மோதல்களில் ஈடுபட்டதாக 46 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே அகர்பூர் பகுதியில் இருதரப்பு மோதல்கள் நடைபெற்றுள்ளன. இதனால் இப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+