தெரியாமல் எலி மருந்தை எடுத்து குடித்த 13 வயசு சிறுமி.. பரிதாபமாக பறிபோன உயிர்!
திருச்சி: "வீட்டில மருந்து மாத்திரை வெக்கிற இடத்துல, எலி மருந்தை தெரியாம வெச்சிட்டு இருக்காங்க.. இது தெரியாமல் 13 வயசு சிறுமி, வயிற்று வலிக்காக இதை எடுத்து சாப்பிடபோய்.. கடைசியில் உயிரே அநியாயமாக போய்விட்டது!
திருச்சி தாராநல்லூர் அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சிராஜூதீன். இவரது மகள் மகபுநிஷா. வயசு 13. அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள்.

சில தினங்களுக்கு முன்பு மகபுநிஷாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவளை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, நிறைய மருந்து மாத்திரைகளை தந்து அனுப்பினார்கள்.
இந்த மருந்துகளை வீட்டில் இருந்து சிறுமி சாப்பிட்டு வந்திருக்கிறாள். கடந்த 24ந்தேதி மகபுநிஷா வீட்டில் வழக்கமாக இருந்த இடத்தில் இருந்து மாத்திரையை எடுத்து சாப்பிட்டாள். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவளுக்கு வாந்தி மயக்கம் ஏற்படவும் பெற்றோர் பதறி போய்விட்டார்கள்.
அவரை அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் கொண்டு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மகபுநிஷாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் எலிமருந்து மாத்திரையை சாப்பிட்டு இருப்பதாக சொன்னார்கள். அப்போது தான் வீட்டில் மருந்து மாத்திரை இருந்த இடத்தில் எலி மருந்து மாத்திரை இருந்ததை தெரியாமல் மகபுநிஷா வயிற்றுவலி மாத்திரை என நினைத்து சாப்பிட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மகபுநிஷா பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து சிராஜூதீன், காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்யவும், அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications