கதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து அபார்ஷன்.. சிக்கிய ஒடிஷா இன்ஸ்பெக்டர்

13 வயது சிறுமியை ஒடிஷா போலீஸ்காரர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஸ்டேஷனிலேயே கும்பலாக சேர்ந்து 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.. இதில் சிறுமி கர்ப்பமாகி விடவும், வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மிரட்டி, அபார்ஷனும் செய்துள்ளனர் போலீசார்... இந்த கொடுமை ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு 13 வயதாகிறது.. கடந்த மார்ச் மாதம் பிராமித்பூரில் ஒரு கண்காட்சி நடக்கவும் அதை சுற்றி பார்க்க நண்பர்களுடன் வந்துள்ளார். ஆனால், லாக்டவுன் காரணமாகக் கடைசி நேரத்தில் அந்த கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. வந்த இடத்தில் நேரமாகிவிட்டதால், தன் சொந்த ஊருக்கு செல்ல பஸ் எதுவுமில்லாமல் தவித்துள்ளார்.

13 year old odisha tribal girl gang rape at police station

அந்த சமயத்தில், காவல் ஆய்வாளர் சந்திரமஜி தலைமையில் ரோந்து போலீசார் வந்தனர்.. சிறுமியை பார்த்ததும் விசாரணை என்று கூறி, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர்... ஸ்டேஷன் சென்றவுடனேயே சந்திரமஜி உட்பட சில போலீசார்கள் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அதன்பிறகு வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லை.. கடந்த 2 மாசமாகவே சிறுமியை ஸ்டேஷனுக்கு மிரட்டி வரவழைத்து அந்த போலீஸ்கார்கள் இதேபோல பலாத்காரம் செய்துள்ளனர். சில நாட்களில் சிறுமி கர்ப்பமாகிவிட்டார்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சந்திர மஜி, உடனடியாக உள்ளூர் டாக்டரின் உதவியோடு கடந்த ஜுன் மாதம் சிறுமிக்கு அபார்ஷன் செய்துள்ளார்.

இந்த விஷயம் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் போனது.. விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. முதல் டிஸ்மிஸே சந்திர மஜி தான். சம்பந்தப்பட்ட அந்த போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதுடன், இந்த கூட்டு பலாத்காரம் வெட்கக் கேடானது என்று அம்மாநில டிஜிபி அபய், கருத்து தெரிவித்துள்ளார்... ஸ்டேஷன் என்றாலே இப்பவெல்லாம் நடுக்கமாதான் இருக்கு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+