அப்பா இப்படி செய்யாதீர்!... கெஞ்சியும் மனமில்லாமல் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கணவர்
ஹைதராபாதில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மாற்றாந்தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video

ஹைதராபாத்: அப்பா, அப்பா என வாய் நிறைய அழைத்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கணவரை போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது இறந்த கணவனுக்கும் அந்த பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை இருந்தது.
13 வயதை எட்டிய அந்த குழந்தை தற்போது 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் அங்குள்ள கடையில் வேலை செய்து வருகிறார். அந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் பருவ வயதை அடைந்தார்.

கொடுமை
சிறுமியின் தாய் பணிக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மாற்றாந்தந்தை பலாத்காரம் செய்தார். மேலும் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று்ம அப்படி சொன்னால் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் தனது தாயிடம் இந்த கொடுமையை சொல்ல அந்த சிறுமி மிகவும் பயந்தார்.

பொய் கூறுவதாக வாதிட்ட நபர்
இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் கழித்து வேலைக்கு சென்ற தாயிடம் தன்னை விட்டு எங்கும் போக வேண்டாம் என்று அழுது கொண்டே நடந்தவற்றை கூறினாள். இதையடுத்து தனது கணவனிடம் சிறுமியை வைத்துக் கொண்டே தவறாக நடந்து கொண்டது குறித்து கேட்டபோது சிறுமி பொய் கூறுவதாக அந்த நபர் தெரிவித்தார்.

சிறுமி மீது தாக்குதல்
பின்னர் மது போதையில் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் இனி அது போல் செய்ய மாட்டேன் என்று அந்த நபர் மனைவிக்கும், சிறுமிக்கும் வாக்குறுதி கொடுத்தார். இதை இருவருமே நம்பினர். ஆனால் இந்த மாதம் மீண்டும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த அந்த நபர் , தாயிடம் போட்டு கொடுத்ததற்காக பெல்ட்டால் சிறுமியை அடித்துள்ளார்.

உதவிக்கு அழைப்பு
அவரிடம் இருந்து தப்பி கழிப்பறைக்குசென்று பூட்டிக் கொண்டபோதிலும் அதன் கதவை உடைத்து அந்த சிறுமியை அடித்து மீண்டும் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அந்த சிறுமி உதவிக்காக சப்தம் போட்டு அக்கம்பக்கத்தினர் யாரும் வரவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அந்த நபர் மாற்றாந்தந்தை என தெரியாது.

தாயிடம் மீண்டும் கூறிய சிறுமி
அப்போது கணவரின் விளக்கத்தால் சமாதானம் அடையாத சிறுமியின் தாய், வீட்டுக்கு சீக்கிரமாகவே திரும்பினார். அதை கண்ட அந்த நபர் கண்ணை மூடிக் கொண்டு தூங்குமாறு நடந்தவற்றை தாயிடம் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார். அவர் சொன்னது போல் அந்த சிறுமியும் கண்ணை மூடிக் கொண்டு தூங்குவது போல் நடித்தார். இதை உணர்ந்த அந்த தாய் நடந்தவற்றை கேட்டபோது சிறுமி அனைத்தையும் கூறினார்.

மாற்றாந்தந்தை கைது
உடனடியாக இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் அந்த நபரை போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே சிறுமியின் தாய்க்கு போன் செய்து தன் மீதான புகாரை வாபஸ் வாங்குமாறும் சிறுமியின் பெயரில் பணம் அனுப்புவதாகவும் கூறியிருந்தார். இந்த செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீஸார் அவரை கைது செய்தனர்.

விடுதியில் தங்கி படிக்க விருப்பம்
இதனிடையே அந்த சிறுமி குழந்தைகள் உரிமை ஆணையத்தை அணுகி எனக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை. நான் வீட்டில் இருந்தால் இதுபோல் மீண்டும் மீண்டும் சம்பவங்கள் நடக்கலாம். அப்பா இது போல் செய்யாதீர் என்று நான் கூறியும் அவர் கேட்கவில்லை. நான் ஹாஸ்டலில் தங்கி நன்கு படித்து ஒரு போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்தை அடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications