தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இருந்து 138 தொழிலாளர்களை திரும்ப அழைத்தது மே.வங்க அரசு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பணிபுரிந்து வந்த 138 மேற்கு வங்க தொழிலாளர்கள் அங்கிருந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். வெளிமாநிலத்தவர் பணிபுரிய தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தங்களது மாநில தொழிலாளர்களை திரும்ப வரவழைத்துள்ளது மேற்கு வங்க அரசு.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தது 370-வது அரசியல் சாசன பிரிவு. இதன் உட்பிரிவுகளும் ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர் குடியேறி சொத்துகளை வாங்க தடைவிதித்து வந்தது.

138 WB labourers brought back to Kolkata from Jammu Kashmir

இந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன் அம்மாநிலத்தையே 2 யூனியன் பிரதேசங்களாகவும் மாற்றியது. இந்த யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31-ந் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

முன்னதாக 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிராகவும் வெளிமாநிலத்தவர் குடியேற எதிர்ப்பு தெரிவித்தும் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அக்டோபர் 29-ந் தேதியன்று 5 மேற்கு வங்க தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர்.

இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் இருந்து தமது மாநில தொழிலாளர்களை திரும்ப அழைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்தது.

இதையடுத்து மேற்கு வங்க அரசு ஏற்பாட்டில் காஷ்மீரில் இருந்து 138 தொழிலாளர்கள் இன்று கொல்கத்தாவுக்கு ரயிலில் திரும்பினர். அப்போது பேசிய அவர்கள், இங்கு எந்த வேலையும் கிடைக்காத நிலையில்தான் காஷ்மீருக்கு சென்றோம். அதனால் அரசு எங்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+