மே. வங்கத்தில் 24 மணி நேரத்தில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் பார்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் தபாஸ் குமார் கோஷ் கூறியதாவது:
பார்த்வான் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் இருந்து காலை 6 மணிவரையில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 8 குழந்தைகள் அதற்கு பின்னர் உயிரிழந்தனர்.
குழந்தைகளில் சிலர் இந்த மருத்துவமனையில் பிறந்தவர்கள். பலர் மற்ற மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு இங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர்கள்.
குழந்தைகள் அனைத்தும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள். உயிரிழ்ந்த குழந்தைகள் அனைத்தும் பிறந்து சிலமாதங்களே ஆனவர்கள். நவராத்திரி பண்டிகை காரணமாக மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.
360 பிறந்த குழந்தைகளை வெறும் இரண்டு நர்சுகளே பார்த்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து இரண்டு புதிய நர்சுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.,
இவ்வாறு தபாஸ் குமார் கூறினார்.
பார்த்வான் மருத்துவமனையின் முன் குழந்தைகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications