தீபாவளிக்கு 14 குழந்தைகளின் கண்பார்வையை பறித்த ‛கார்பைட் கன்’.. அப்படினா? மக்களே இப்படி செய்யாதீங்க
போபால்: தீபாவளி பண்டிகையையொட்டி இமாச்சல பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் ‛கார்பைட் கன்' எனும் வெடி வெடித்து 200 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதில் 14 பேரின் கண்பார்வை முற்றிலுமாக பறிப்போய் உள்ளது. இந்த ‛கார்பைட் கன்' பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு தீபாவளியின்போதும் பொதுமக்கள் அலட்சியமாகவும், ஆபத்தை உணராமலும் பட்டாசு வெடித்து காயத்தை வாங்கி கொள்வார்கள்.

குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு கண்களில் காயங்கள் ஏற்படும். அதற்கு இந்த தீபாவளியும் விதி விலக்கல்ல. இந்த தீபாவளிக்கும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் வடமாநிலங்களில் ‛கார்பைட் கன்' நிறைய பேரை பதம் பார்த்துள்ளது.
‛கார்பைட் கன்'.. இது துப்பாக்கி போன்று செயல்படும் ஒரு வகை வெடியாகும். அதாவது துப்பாக்கியை சுடும்போது அதில் இருந்து தோட்டா வெளியே வருவது போல், இந்த ‛கார்பைட் கன்'னை அழுத்தும்போது ‛கால்சியம் கார்பைட் மற்றும் தீக்குச்சி மருந்து சேர்ந்து சத்தமாக வெடிக்கும். இது பிளாஸ்டிக் குழாய் அல்லது தகர டப்பாவை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும்.
அதன் உள்ளே ‛கன் பவுடர்' எனும் ‛கால்சியம் கார்பைட் பவுடர்' நிரப்பப்படுகிறது. அதன்பிறகு தீக்குச்சியின் மேற்பரப்பில் உள்ள மருந்தை, கால்சியம் கார்பைட் பவுடருடன் சேர்த்து அழுத்தும்போது அது சத்தமாக வெடிக்கும். இது மிகவும் ஆபத்தானது. வெடிக்கும்போது பிளாஸ்டிக் குழாய், தகர டப்பா உள்ளிட்டவை வெடித்து சிதறலாம். இது கண் மற்றும் முகத்தில் காயத்தை ஏற்படுத்தலாம்.
இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ‛கார்பைட் கன்' விற்பனைக்கு தடை செய்யப்பட்டது. இது வெறுமனே கடைகளில் சுமார் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளும் இதனை வீட்டிலேயே செய்து பயன்படுத்துவார்கள். இருப்பினும், சிலர் தடையை மீறி விற்பனை செய்தனர். இதனை பயன்படுத்தி பட்டாசு வெடித்து மத்திய பிரதேசத்தில் 122 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போபால், இந்தூர், ஜபால்பூர், குவாலியர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் மருத்துவமனைகளில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 14 குழந்தைகளின் கண்பார்வை பறிப்போய் உள்ளது. விதிசா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட 7 வயது குழந்தை கூறுகையில்,‛‛தீபாவளிக்காக நானே ‛கார்பைட் கன்' தயாரித்தேன். பட்டாசு வெடிக்கும்போது ‛கார்பைட் கன்' வெடித்து கண்ணில் காயம் ஏற்பட்டது'' என்றார்.
மத்திய பிரதேசத்தை போல் பீகாரிலும் ஏராளமானவர்கள் இந்த ‛கார்பைட் கன்' வெடியை பயன்படுத்தி காயமடைந்துள்ளனர். சுமார் 75க்கும் அதிகமானவர்களின் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட 2 மாநிலங்களில் மட்டும் தீபாவளிக்கு ‛கார்பைட் கன்' பயன்படுத்தி 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.அதில் 14 பேர் கண் பார்வையை இழந்துள்ளனர். இதனால் தீபாவளி சமயத்தில் இந்த வகை ‛பட்டாசு' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications