சிறப்பு அந்தஸ்து நீக்கம்.. நாளையுடன் ஓராண்டு நிறைவு.. ஸ்ரீநகரில் இன்றும் நாளையும் 144 தடை
காஷ்மீர்: காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு நாளையுடன் ஓராண்டு ஆகும் நிலையில் இன்றும் நாளையும் ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலமானது அந்த அந்தஸ்தை இழந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

இந்த நடவடிக்கையின் போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக இன்டர்நெட் சேவைகள், போன் சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலை சரியானதும் அவர்கள் வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எனினும் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோருக்கு வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
இதையொட்டி காஷ்மீரில் நாளை கருப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் முயற்சித்து வருவதாக தெரிகிறது. மேலும் இவர்கள் வன்முறையில் ஈடுபட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இதனால் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடவும் போராட்டம் நடத்தவும் அனுமதி இல்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications