15 நாய்க்குட்டிகளை அடித்தே கொன்று மூட்டை கட்டி போட்ட கொடூரன்.. கொல்கத்தாவில் சைக்கோவின் ஷாக் செயல்

15 நாய்க்குட்டிகளை விஷம் வைத்து ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: 15 நாய்க்குட்டிகள் மற்றும் ஒரு நாயை மிக கொடூரமாக கொன்ற சைக்கோ யார் என கொல்கத்தா போலீசார் தேடி வருகின்றனர்.

கொல்கத்தாவில் என்ஆர்எஸ் மருத்துவமனை வளாகத்தில் சில மூட்டைகள் கிடந்தன. மருத்துவமனையில் வேலை பார்க்கும் புதுல் ராய் என்பவர் அந்த வழியாக கடந்து செல்லும்போது இதனை பார்த்தார். அப்போது, ஒரு மூட்டை மட்டும் அசைவுடன் தென்பட்டது.

என்ன ஏதென்று கிட்ட போய் பார்த்தால், ரத்தம் சொட்ட சொட்ட நாய் ஒன்று வெளியே வர முயற்சி செய்து கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அலறி துடித்து கூச்சலிட்டார் ராய். யாராவது உடனே வாங்களேன் என்று சத்தம் போட்டார். உயிருக்கு போராடிய நாயை மூட்டையிலிருந்து வெளியே எடுத்தார். நாயை தூக்கியதும் ரத்தம் அதிகமாக கொட்டியது.

கண்ணீர் வடித்தனர்

கண்ணீர் வடித்தனர்

உடனே மற்ற மூட்டைகளும் அவிழ்க்கப்பட்டு பார்க்கப்பட்டதில் 15 நாய்க்குட்டிகள் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு நாய்க்குட்டியும் மிக கொடூரமாக கொல்லப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த தகவல் ஆஸ்பத்திரி முழுக்க பரவியதும், ஏராளமானோர் கூடி இறந்துகிடந்த நாய்க்குட்டிகளை கண்டு கண்ணீர் வடித்தார்கள்.

பிஸ்கட்டில் விஷம்

பிஸ்கட்டில் விஷம்

இந்த விஷயம் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்களும் விரைந்து வந்து இறந்த நாய்க்குட்டிகளின் உடலை கைப்பற்றினார்கள். இது சம்பந்தமான விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்குட்டிகளுக்கு எல்லாம் பிஸ்கட்டில் விஷம் கலந்து கொடுக்கவே, அவற்றை சாப்பிட்ட நாய்க்குட்டிகள் மயங்கி விழுந்திருக்கின்றன.

அடித்து கொலை

அடித்து கொலை

அதன்பிறகு மயங்கிய நாய்க்குட்டிகளை சாக்கு பைக்குள் போட்டு கட்டிப்போட்டு அவற்றை மிக கொடூரமாக அடித்து கொல்லப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இப்படி நாய்க்குட்டிகளை அடித்து கொன்றிருப்பது ஒரு சைக்கோவாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அந்த சைக்கோ யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை.

விலங்கு நல ஆர்வலர்கள்

விலங்கு நல ஆர்வலர்கள்

ஆனால், இதற்கு முன்பு பல நாய்க்குட்டிகளையும் இதுபோல கொன்றிருக்கலாம் என போலீசார் யூகிக்கிறார்கள். இது சம்பந்தமான அடுத்தடுத்த விசாரணையையும் தீவிரப்படுத்தி உள்ளனர். நாய்க்குட்டிகள் இவ்வளவு கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதை கண்டு விலங்கு நல ஆர்வலர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களே கொதித்து போய் உள்ளனர்.

சைக்கோ யார்?

சைக்கோ யார்?

நாய்க்குட்டியை கொன்ற சைக்கோவை கண்டுபிடித்து, எதற்காக இவ்வளவு கொடூரமாக கொலை செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடித்து, அந்நபருக்கு உரிய தண்டனையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று பலத்த கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+