இந்த புள்ளி விவரங்களை பாருங்க... கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை பாஜகவுக்கு கன கச்சிதமாக பொருந்துதே!

4 ஆண்டுகளில் 15 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களின் முடிவுகளை ஒப்பிடுகையில் பாஜகவின் வீழ்ச்சி அதிகரித்து கொண்டே வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    லோக்சபா தேர்தல் வரும் பின்னே.....மோடியின் திடீர் திடீர் பிரஸ் மீட் முன்னே!

    டெல்லி: பாஜகவின் செல்வாக்கு 2014-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை படுவேகமாக சரிந்து வருகிறது என்பதை 4 ஆண்டுகளில் 15 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனால்தான் பாஜக முன்கூட்டியே லோக்சபா தேர்தலை நடத்துவதில் முனைப்பும் காட்டுகிறது.

    2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 282 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. ஆனால் இப்போது தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் இந்த இடங்களை வெல்லவே முடியாது என பாஜக மேலிடம் கருதுகிறது.

    இதனால் உடனடியாக ஒரு தேர்தலை நடத்தி மாநில கட்சிகளின் துணையுடன் ஆட்சியை தக்க வைக்கலாம் என்பது பாஜகவின் வியூகம். இந்த நிலையில் பாஜகவின் செல்வாக்கு எப்படியெல்லாம் சரிந்துள்ளதை என்பதை bloombergquint.com இணையதளம் புள்ளி விவரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்களின் தொகுப்பு.

    பாஜகவுக்கு 282 இடங்கள்

    பாஜகவுக்கு 282 இடங்கள்

    லோக்சபாவில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க தேவை 272 எம்.பி.க்கள். 2014 தேர்தலில் பாஜகவுக்கு 282 எம்.பிக்கள் கிடைத்தனர்.

    146 லோக்சபா தொகுதிகள்

    146 லோக்சபா தொகுதிகள்

    2014-க்குப் பின்னர் 15 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இம்மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பாஜகவுக்கு 146 லோக்சபா தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால் 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 45 இடங்கள் குறைவு. இந்த 15 மாநிலங்களில் 2014-ம் ஆண்டு 191 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றியிருந்தது பாஜக.

    45 தொகுதிகள் குறைவு

    45 தொகுதிகள் குறைவு

    இதனடிப்படையில் லோக்சபாவில் பாஜகவின் பலத்தை கணக்கிட்டால் 237 இடங்கள்தான் இருக்கும். 2014-ம் ஆண்டு பெற்ற 282 இடங்களைவிட 45 தொகுதிகள் குறைவு.

    2018-ல் 854 தொகுதிகள்

    2018-ல் 854 தொகுதிகள்

    15 மாநிலங்களில் 2014-ம் ஆண்டு பாஜக பெற்றிருந்த சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 1,171. ஆனால் தேர்தல்களில் 854 சட்டசபை தொகுதிகளில்தான் பாஜக வென்றிருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு இடங்களை பாஜக இழந்திருக்கிறது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் வாக்குகளான 39%-ல் இருந்து 29% ஆக குறைந்துள்ளது.

    பாஜகவுக்கு மேலும் சரிவு ஏற்படும்

    பாஜகவுக்கு மேலும் சரிவு ஏற்படும்

    இந்த ஆண்டில் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. 2014-ம் ஆண்டில் இந்த 4 மாநிலங்களில் மட்டும் 79 லோக்சபா தொகுதிகளில் பாஜக வென்றிருந்தது. ஆனால் இம்முறை பாஜக குறைந்தபட்சம் 20 தொகுதிகளை பறிகொடுக்கும் நிலை இருக்கிறது.

    2016-ல் 250 இடங்கள்

    2016-ல் 250 இடங்கள்

    அதாவது இன்னும் விரிவாக பார்த்தால், 2014-ம் ஆண்டு மே மாதம் 282 இடங்களைப் பெற்றிருந்தது பாஜக. அதே ஆண்டில் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்கள் முடிவின் அடிப்படையில் இது 280 ஆக குறைந்தது. 2015-ல் டெல்லி, பீகார் தேர்தல்களுக்கு பின்னர் 256; 2016-ல் தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அஸ்ஸாம் தேர்தல்களுக்கு பின் 250 ஆக குறைந்தது.

    2018-ல் 217 இடங்கள்?

    2018-ல் 217 இடங்கள்?

    2017-ல் உ.பி,, பஞ்சாப், கோவா, உத்தர்காண்ட் மற்றும் மணிப்பூர் தேர்தல்களுக்கு பின் 245; குஜராத், இமாச்சல் தேர்தல்களுக்குப் பின்னர் 237 ஆன குறைந்தது. இந்த ஆண்டு 4 சட்டசபை தேர்தல்களுக்குப் பின்னர் 217 ஆக குறையும். இவ்வாறு அந்த இணையதளம் கணக்கிட்டுள்ளது. இப்படி பாஜகவின் செல்வாக்கு கிடுகிடுவென சரிவதால்தான் முன்கூட்டியே தேர்தலை நடத்தி ஆகக் குறைந்தபட்ச கவுரமான இடங்களை கைப்பற்ற திட்டமிடுகிறதாம் பாஜக.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+