15 வயது சிறுமியை மயக்கமருந்து ஸ்பிரே அடித்துக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த கொடூரக் கும்பல்!
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து 15 வயதான சிறுமியைக் கடத்திச் சென்று கும்பல் ஒன்று பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பட்டாலா மாவட்டத்திலுள்ள ஜவுரா சிங்கா கிராமத்தை சேர்ந்த பதினைந்து வயது சிறுமியை மயக்க ஸ்பிரே அடித்து கடத்திச் சென்று பலாத்காரம் செய்த அக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவு பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த அந்த 15 வயது சிறுமியின் வீட்டில் நுழைந்த மூன்று பேர் ரசாயானம் கலந்த மயக்க ஸ்பிரேயை அவர்கள் முகத்தில் தெளித்ததில் இருவரும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து தரம் சிங் என்பவரின் வீட்டிற்கு அந்த சிறுமியைத் தூக்கிச் சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் அவளை பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் மூவரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications