காது, உதடு, கழுத்தில் கடித்த அடையாளம்.. 150mg விந்து.. கொல்கத்தா பெண் டாக்டர் வழக்கில் சிபிஐ தீவிரம்
கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்கள்.. நேற்றிரவு மருத்துவர்கள் போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததால், மருத்துவமனை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து போலீசார் சொல்வது என்ன?
8ம் தேதி இரவு பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில் தூங்க சென்ற பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கழுத்து எலும்பு: மாணவியின் கழுத்து எலும்பு முறிந்துள்ளது. அந்தரங்க பாகங்கள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் உள்ளன. பின்னர் அவர் மூச்சுத்திணறி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைதாகி உள்ளார்.
இந்த வழக்கை வழக்கை விசாரிப்பதற்காக டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு நேற்றைய தினமே கொல்கத்தா சென்றடைந்தது. இந்த குழுவில் தடயவியல் மற்றும்மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்..
நேரில் ஆய்வு: கொல்கத்தா சென்றதுமே அவர்கள் 3 குழுவாக பிரிந்தார்கள். இதில் ஒரு குழுவானது, சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரிலேயே சென்று ஆய்வு செய்தது. அப்போது சம்பவ நாளில் பணியில் இருந்தவர்களிடம் அந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இன்னொரு குழுவினர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.. 3-வது குழுவினர், கொல்கத்தா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சென்று இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றனர். இப்படி 3 விதமான குழுக்கள் தங்கள் விசாரணையை துரிதமாக மேற்கொண்டு வரும்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் உடலில் 150 மில்லி கிராம் செல்கள் இருப்பது தெரியவந்துள்ளது...
உதடு, கழுத்து: பாதிக்கப்பட்ட பெண்ணின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், "தலையின் பல பாகங்களில் காயத்தின் அறிகுறிகள் தென்பட்டன. இரண்டு காதுகளிலும், உதடுகளிலும், கழுத்திலும் கடித்த அடையாளங்கள் உள்ளன. அவரது உடலில் 150 மில்லி கிராம் உயிரணுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக" பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒருவர் மட்டும் பாலியல் வன்கொடுமை செய்திருந்தால் இந்த அளவுக்கு விந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதால், தங்கள் மகள், கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மேற்கு வங்கத்தில் மேலும் கொதிப்பை தந்துவிட்டது.
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? அப்படியானால் தற்கொலை என்று முதலில் தகவல் வெளியானது ஏன்? என்ற கோணங்களிலும் இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
தொடர்ந்து கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும்நிலையில், ஆகஸ்ட் 14 நள்ளிரவில் மருத்துவமனைக்குள் கலவரக்காரர்கள் புகுந்து வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள்.. அடையாளம் தெரியாத கும்பல் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து போராட்ட மையத்தை அடித்து நொறுக்கியதாகவும், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெண்டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இடமும் அடித்து நொறுக்கப்பட்டதாம்.
முயற்சி: இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, "பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரை காப்பாற்றும் முயற்சியானது, மருத்துவமனை மீதும்மாநில நிர்வாகம் மீதும் கேள்விஎழுப்புகிறது" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
ஆனால், "வன்முறையில் ஈடுபட்டவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்" என்று எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார்.
காவல்துறை: இதற்கு நடுவில் காவல்துறை இதனை மறுத்துள்ளது.. அப்படி எதுவுமே வன்முறை நடக்கவில்லை, தவறான தகவலை பரப்புவதாக போலீஸ் தரப்பு சொல்கிறது.
கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் குமார் இதுகுறித்து சொல்லும்போது, "பொய்யான ஊடக பிரசாரத்தால் கொல்கத்தா காவல்துறை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது... இந்த வழக்கில் ஒரே ஒரு குற்றவாளிதான் இருக்கிறார் என்று காவல்துறை சொல்வில்லை..
அறிவியல் ஆதாரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது கிடைக்க இன்னும் நேரம் ஆகும். அதுக்காக வெறும் வதந்திகளின் அடிப்படையில், எதுவும் செய்ய முடியாது என்கிறார் போலீஸ் அதிகாரி வினீத் குமார்.
பரபரப்பு: குறைந்தது மூன்று நபர்கள் எங்கள் மகளின் கொலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள், பதிவுகளில் இருப்பதாக நம்பகமான தகவல்கள் மூலம் அறிந்து கொண்டோம். ஒருவரால் மட்டும் இவற்றை செய்திருக்க முடியாது... கூட்டு பாலியல் வன்கொடுமை என்பதை நிரூபிக்கும் இந்த ஆதாரங்கள் தெளிவாக இருந்தாலும், மற்ற குற்றவாளிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கண்ணீர் மல்க சொல்கிறார்கள்.
இது தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்திவருகிறார்கள்.. பெண்ணின் உடலில் 150 மி.கி உயிரணுக்கள் இருப்பதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், நள்ளிரவு வன்முறையால் கொந்தளித்து காணப்படுகிறது கொல்கத்தா.. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் குதித்துள்ளதால், மம்தா அரசுக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications