நள்ளிரவில் லிப்ட் கேட்ட சிறுமி.. தனியாக கூட்டி சென்று பலாத்காரம்.. 2 இளைஞர்கள் அட்டகாசம்
16 வயது சிறுமியை சீரழித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
நெல்லூர்: ஹைதராபாத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் நான்கு பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் போட்டு தள்ளியும் கூட காம வெறியர்கள் திருந்துவதாக இல்லை. ஆந்திராவில் 16 வயது சிறுமியை சீரழித்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்தும் எரித்து கொன்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் ஹைதராபாத் போலீஸார் அதிரடிாயக என்கவுன்டர் மூலம் கொலை செய்து விட்டனர்.

இந்த நிலையிலும் கூட வெறியர்கள் திருந்துவதாக இல்லை. கடந்த மாதம் 25ம் தேதி ஆந்திர மாநிலம் திருச்சானூரில் 16 வயது சிறுமியை 2 பேர் கொண்ட கும்பல் லிப்ட் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரு அயோக்கியர்களான வெங்கடேஷ், பக்கே ராஜமோகன் நாயக் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் திருப்பதியை சேர்ந்தவர்கள் ஆவர்.நவம்பர் 24ம் தேதியன்று நள்ளிரவுவாக்கில் அந்தப் பெண் திருச்சானூர் செல்வதற்காக மெயின் ரோட்டில் நின்றிருந்தார்.
அப்போது வெங்கடேஷ் பைக்கில் அந்தப் பக்கம் வந்துள்ளார். அவரை நிறுத்திய சிறுமி டிராப் செய்யுமாறு கேட்டுள்ளார். வெங்கடேஷும் அழைத்துச் சென்றார். ஆனால் சிறுமி சொன்ன இடத்திற்கு கூட்டிச் செல்லாமல், முல்லுபுடி என்ற கிராமத்திற்குக் கூட்டிப் போனார்.
அங்கு போனதும் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக கூறிய வெங்கடேஷ் தனது நண்பர் நாயக்கை போன் செய்து அழைத்துள்ளார். நாயக் வரவும், இருவரும் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி தனியான இடத்திற்குத் தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
இரவு முழுவதும் தவித்த சிறுமி அடுத்த நாள் காலை கஷ்டப்பட்டு தனது வீடு சென்று சேர்ந்தார். பெற்றோரிடம் இதுகுறித்து கூறினார். இதையடுத்து திருச்சானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் தற்போது இரண்டு பேரும் சிக்கியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications