உ.பியில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி... 40 பேர் கவலைக்கிடம்... 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கள்ளாச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஈதா பகுதியில் உள்ளது லகாரி தார்வாஜா மற்றும் அஜ்ன்ட் லாகிரா கிராமங்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம், அதே பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் அனைவருக்கும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

17 பேர் பலி...
ஆனால், அவர்களில் சிகிச்சைப் பலனின்றி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்வை பறிபோனது...
கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமானது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பலருக்கு பார்வை பறி போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாலை மறியல்...
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அப்பகுதி மக்கள் கள்ளச்சாராய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈதா-பருக்காபாத் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

5 அதிகாரிகள் சஸ்பெண்ட்...
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மல்லிகாபாத் ஆய்வாளர், மதுவிலக்குப்பிரிவு போலீஸ் உள்பட 5 பேரை அம்மாநில அரசு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

கைது...
இது ஒருபுறம் இருக்க, கள்ளச்சாராயம் காய்ச்சிய விவகாரம் தொடர்பாக முக்கிய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என அம்மாவட்ட நீதிபதி அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications