நேபாளத்தை வாரி சுருட்டிய கனமழை! வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஆக உயர்வு
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
காலநிலை மாற்றம் எதிர்பாரா தாக்கங்களை சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனின் வெப்ப நிலை உயர்ந்தது, பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் போன்றவை இதன் விளைவுகளாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கின்றன.

கிழக்கு மற்றும் மத்திய நேபாள் பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கார்கள், வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. நேற்றுவரை 148 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை இன்று 170ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 322 வீடுகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மீட்பு பணிகளில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக பாகமதி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் தற்போதைய பாதிப்புகளுக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
தங்கள் வாழ்நாளில் இப்படியொரு வெள்ள பாதிப்பை பார்த்ததில்லை என்றும், உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
வானில ஆய்வு மைய அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், "வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வழக்கத்தை விட அதிகமாக வடக்கு பகுதியில் ஏற்பட்ட பருவமழை அதிகரிப்பு என இரண்டும்தான் இந்த வெள்ளத்திற்கு முக்கிய காரணம். கனமழை மேலும் ஓரிரு நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளை கண்காணித்து வருவதாகவும், மீட்பு பணிக்காக தங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications