19 நாட்கள் ஃபேஸ்புக் நட்பால் படுகொலை செய்யப்பட்ட பெண் சாப்ட்வேர் என்ஜினியர்
பெங்களூர்: ஃபேஸ்புக் மூலம் 19 நாட்கள் நண்பராக இருந்தவரால் பெங்களூர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் சாப்ட்வேர் என்ஜினியர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குசும் ராணி சிங்க்ளா(31). நொய்டாவில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்த அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

பெங்களூர் காடுகோடியில் உள்ள அபார்ட்மென்ட்டில் தோழியுடன் தங்கி வேலை பார்த்து வந்தவர் ஃபேஸ்புக் நண்பரால் லேப்டாப் வயரால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டார். குசும் கொலை வழக்கு பற்றிய விபரங்கள்,
* 31 வயதான குசும் திருமணமாகி விவாகரத்தானவர். கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரில் வசித்து வந்தார்.
* ஹரியானாவைச் சேர்ந்த சுக்பிர் சிங் என்பவர் குசுமிற்கு ஃபேஸ்புக்கில் பிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுக்க அவர் அதை ஏற்றுள்ளார்.
* ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான சுக்பிரை நம்பி தனது செல்போன் எண்ணை அவரிடம் அளித்துள்ளார் குசும்.
* குசும் மற்றும் சுக்பிர் ஃபேஸ்புக் மூலம் 19 நாட்கள் பழகியுள்ளனர்.
* கடந்த செவ்வாய்க்கிழமை சுக்பிர் ஹரியானாவில் இருந்து பெங்களூர் வந்துள்ளார்.
* அபார்ட்மென்ட்டுக்கு வந்த அவருக்கு மதிய உணவு எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார் குசும்.
* சுக்பிர் குசுமிடம் ரூ.50 ஆயிரம் பணமும், ஹரியானாவுக்கு திரும்பிச் செல்ல விமான டிக்கெட்டும் வாங்கிக் கேட்க அவர் மறுத்துவிட்டார்.
* பணம் தர மறுத்த குசுமின் நெற்றியில் சுக்பிர் பேனாவால் குத்தியுள்ளார். லேப்டாப் வயரை எடுத்து குசுமின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
* மதியம் 12.15 மணிக்கு அபார்ட்மென்ட் வந்த சுக்பிர் 3.30 மணிக்கு அங்கிருந்து சென்றுவிட்டார்.
* குசுமை கொலை செய்துவிட்டு அங்கிருந்த ஏடிஎம் கார்டுகள், செக்புக்குகளை எடுத்துச் சென்றுள்ளார்.
* சுக்பிர் குசுமின் ஏடிஎம் கார்டை வைத்து ரூ.11 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.
* ஹரியானாவைச் சேர்ந்த சுக்பிர் பெரிய நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தவர். தற்போது அவர் வேலை செய்யவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications