சிறுமியை மிரட்டி உல்லாசம்.. 19 இளைஞர்களை தாக்கிய 'உயிர்க்கொல்லி'! இதுதான் கர்மாவா?

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில், போதைக்கு அடிமையான 17 வயது சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் சில இளைஞர்களுக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில், அவர்களது துணைவியாருக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

உலகில் மிகவும் கொடிய தொற்று பாதிப்பு எச்ஐவிதான். இதற்கு இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்கிறது மருத்துவ உலகம். இருப்பினும், எச்ஐவி உடன் வாழ்வது என்பது, மிகப்பெரிய போராட்டம்தான். இப்படி இருக்கையில், உத்தரகாண்ட் மாநிலத்தில், போதைக்கு அடிமையான சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

hiv uttarakhand

உத்தரகாண்ட் மாநிலம் நானிடால் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் எனும் பகுதியில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள 17 வயது சிறுமி ஒருவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்திருக்கிறார். இப்படி இருக்கையில் சிறுமியுடன் பழகிய இளைஞர்கள் சிலர், போதை பொருள் வேண்டும் என்றால் தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். இப்படியாக சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.

19 பேருக்கும் அதிகமான இளைஞர்கள் இந்த கொடுமையை செய்தாக சொல்லப்படுகிறது. இந்த இளைஞர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. காய்ச்சல், தீராத உடல் சோர்வு என மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது ரத்த மாதிரியை பரிசோதித்தபோதுதான், இவர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தொற்று யார் மூலம் பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மறுபுறம் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் சிலருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது. எனவே இவர்களின் மனைவியருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திடம் பேசிய அப்பகுதி மருத்துவர்கள், "இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த ஆண்டு 45 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமி ஹெராயின் போதைக்கு அடிமையாகியிருந்திருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்குதான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் நோய்வாய்ப்பட தொடங்கிய உடன் நாங்கள் உடனடியாக சோதனை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தொடங்கினோம். ஆனால் சோகம் என்னவெனில், சில இளைஞர்களுக்கு திருமணமாகி உள்ளது. அவர்களின் மனைவியும் கூட இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்" என்று கூறியுள்ளனர்.

போதைக்கு அடிமையான சிறுமியை ஏமாற்றி, வன்கொடுமை செய்த 19 இளைஞர்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது, ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+