திகார் சிறையில் கைதிகளிடையே கோஷ்டி மோதல்: 2 பேர் பலி, 12 பேர் காயம்
டெல்லி: டெல்லியில் உள்ள திகார் சிறையில் இரண்டு பிரிவு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் பலியாகியுள்ளனர், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள திகார் சிறையில் பாதுகாப்பு அதிகம் உள்ள வார்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஈஷ்வர், விஜய் மற்றும் ஷதாப். புதன்கிழமை மதியம் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பிறகு போலீசார் அவர்களை அவர்களின் வார்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேறு ஒரு கும்பலைச் சேர்ந்த அனில், வாசு மற்றும் சந்தீப் ஆகியோர் ஈஷ்வர், விஜய் மற்றும் ஷதாபை தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கினர்.
இரு பிரிவினருக்கு இடையே நடந்த இந்த மோதலில் 20களில் இருந்த ஈஷ்வர் மற்றும் அனில் ஆகியோர் பலியாகியுள்ளனர். இந்த இரண்டு பிரிவினர் மோதிக் கொண்டபோது சிறை எண் 1, 2 மற்றும் 4 ஆகியவற்றில் இருந்த கைதிகளும் அதில் கலந்து கொண்டனர்.
இந்த மோதலில் 12 விசாரணை கைதிகள் மற்றும் பாதுகாவலர்கள் காயம் அடைந்துள்ளனர். மோதலை தடுக்கச் சென்ற கைதிகளும் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் தீனதயாள் உபத்யாய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் திகார் சிறையில் 4 கைதிகள் சேர்ந்து ஒரு விசாரணை கைதியை கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறையில் மோதல்:
கடந்த மாதம் 25ம் தேதி சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறைகளை சிறை காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கைதிகள் காவலர்களை தாக்கினர். கைதிகள், காவலர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஜெயிலர் உள்பட 4 காவலர்கள் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications