காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்- 2 தீவிரவாதிகள் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் இடையே நிடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று காலை தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த துப்பாக்கிச் சண்டை சிலமணி நேரம் நீடித்த நிலையில், அங்கு பதுங்கியிருந்த இரு தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லையில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications