டிஸ்கவுண்ட் கொடுக்காததால் ஆத்திரம்.. இருவர் சுட்டுக்கொலை.. பட்டப்பகலில் மாலில் நடந்த கொடூர கொலை!
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிஸ்கவுண்ட் கொடுக்காத காரணத்தால் மால் ஊழியர்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிஸ்கவுண்ட் கொடுக்காத காரணத்தால் மால் ஊழியர்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் நாளுக்கு நாள் பொருளாதார ரீதியாக மோசமானாலும் வேறு ஒரு விஷயத்தில் அமெரிக்கா போலவே மாறியுள்ளது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
பல ஆண்கள் எளிதாக துப்பாக்கியுடன் நடக்கிறார்கள். இந்த நிலையில் வாரணாசியில் உள்ள பிரபல ஜெஎச்வி மாலில் நேற்று மாலை கொடூர கொலை சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது.
[கட்டிங்... ஷேவிங்.. குக்கிங்.. எதா இருந்தாலும் பண்றேங்க.. ஓட்டு மட்டும் போட்ருங்க போதும்!]

பெரிய சண்டை
அந்த ஜெஎச்வி மாலில் உள்ள பிரபல துணி கடையில் துணி எடுக்க வந்த அந்த இரண்டு மர்ம நபர்கள் அங்கிருந்த கடை ஊழியரிடம் அதிக டிஸ்கவுண்ட் கேட்டுள்ளனர். கடைக்காரர் டிஸ்கவுண்ட் கொடுக்க முடியாது என்று உறுதியாக கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் மூண்டு இருக்கிறது.

கொலை
இந்த நிலையில் அவர்களுக்கு இடையில் கைகலப்பு மூண்டு இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் அந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அங்குள்ளவர்கள் மீது சரமாரியாக சுட்டு இருக்கிறான். இதனால் சுனில், கோபி என்ற இரண்டு மால் ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இரண்டு ஊழியர்கள் மோசமான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வேகமாக ஓடினார்கள்
அந்த கொலையாளிகள், கொலையை செய்துவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடிவிட்டனர். வழியில் இருந்த மக்களை மிரட்டிக் கொண்டே அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்று இருக்கிறார்கள். இதனால் அவர்களை யாரும் பிடிக்கவில்லை.

கைது இல்லை
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாருமே கைது செய்யப்படவில்லை. போலீஸ் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை சோதித்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றுள்ளது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications