“ஷாக்”.. 2 விமானிகளும் மரணம்.. அருணாச்சல் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பறிபோன வீரர்களின் உயிர்கள்
இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் படைத் தளபதிகளின் பயணங்கள், தீவிர ரோந்து பணிகள், மீட்புப் பணிகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக மலை பிரதேசங்களில் நேர விரையத்தை தவிர்க்க சாலை வழியாக செல்லாமல் ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் பயணம் செல்வது வழக்கமாக இருக்கிறது.

அருணாச்சல பிரதேசம்
ஆனால், அங்கு நிலவும் மோசமான வானிலைகளின் காரணமாக விபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. குறிப்பாக அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மலைகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் அதிகளவில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் அங்கு சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராணுவ ஹெலிகாப்டர்
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா என்ற ஹெலிகாப்டரில் இன்று காலை 9:15 மணியளவில் 2 ராணுவ விமானிகள் சென்று கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் திடீரென அவர்கள் தொடர்பை இழந்தனர். அந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

விபத்து
இந்த நிலையில் அந்த ராணுவ ஹெலிகாப்டர் 2 விமானிகளுடன் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிக்கு சென்ற மீட்புப் படையினர், காலை முதல் பல மணி நேரங்களாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்கள். இருப்பினும் விமானிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மலைகள் சூழ்ந்த பகுதி
திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் வழியில் உள்ள பொம்திலா என்ற மலைப்பகுதிகள் நிறைந்த இடத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் சென்ற 2 ராணுவ விமானிகளின் நிலை குறித்து தெரியாமலேயே இருந்தது. அவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இருவரும் உயிரிழப்பு
இந்த நிலையில் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஹெலிகாப்டரில் பயணித்த 2 ராணுவ விமானிகளும் கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்திய ராணுவ விமானிகள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications