திடீரென மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்.. 20 மாணவர்களுக்கு தொற்று.. லூதியானாவை மிரட்டும் கொரோனா
பஞ்சாபில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் 2 பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் டெஸ்ட்கள் நடந்து வருகிறது.
இந்தியாவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று.. இதனால் தடுப்பூசிகளை செலுத்துவதில் இந்த மாநிலம் கவனம் செலுத்தியது..
அப்போது தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அது பெரும் சர்ச்சையையும் கடந்த காலங்களில் ஏற்படுத்தியது..

அறிமுகம்
இதையடுத்து பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்தது.. பிறகு தளர்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.. பிறகு, கடந்த 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.. அதன்படியே பள்ளிகளும் திறக்கப்பட்டன.. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியே வகுப்புகள் நடந்தன.

லூதியானா
ஆனால், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள 2 பள்ளிகளை சேர்ந்த 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பந்தப்பட்ட 2 பள்ளிகளும் 14 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவித்து விட்டது.. இதையடுத்து, அங்கு கிருமி நாசம் செய்யும் பணிகளும், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட எல்லாருக்குமே கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளும் பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

டெஸ்ட்கள்
மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தினமும் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டெஸ்ட்கள் செய்யப்படுவதாகவும், தொற்று உறுதி செய்யப்பட்ட அனைத்து மாணவர்களும் அவரவர் வீடுகளில் தடுமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மாணவர்கள்
அதுமட்டுமல்ல, இளைஞர்களை எளிதாக தொற்று தாக்கிவிடுவதால், பள்ளிகள் திறப்பு குறித்து தீவிர ஆலோசனைகளுக்கு பிறகே முடிவெடுக்க வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, சுமார் 50 சதவிகித பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக நிதி ஆயோக்கின் உறுப்பினர் விகே பால் தெரிவித்துள்ளார்... ஆசிரியர்களும் முன்களப்பணியாளர்கள்தான் என்று கூறியுள்ள விகே பால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications