லட்சாதிபதிதான் நீங்க.. ஆன்லைன் டிரேடிங் மோசடி.. 22 ஆயிரம் கோடி அபேஸ்.. சிக்கிய அசாம் கும்பல்
டிஸ்பூர்: அசாமில் ஆன்லைன் டிரேடிங் மூலமாக 2 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி பொதுமக்களின் ஆசையைத் தூண்டி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களைத் திறந்தாலே பங்கு வர்த்தகம் தொடர்பான விளம்பரங்களும், போஸ்டுகளுமே கண்ணில் படும் அளவுக்கு பங்கு வர்த்தக மோசடிகள் அதீத வளர்ச்சி அடைந்துள்ளன. பயனர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களது வாட்ஸ் அப் எண்ணுக்கு முதலீடு தொடர்பான ஆலோசனைகளை அளிக்கிறோம் என்று தொடர்ச்சியாக குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளை மேற்கொள்கின்றனர்.

இதன் மூலமாக சிக்குபவர்களிடம் ஆன்லைன் டிரேடிங், கிரிப்டோகரன்சி வர்த்தகம் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பெறலாம், சம்பாதிக்கலாம், இரட்டிப்பு லாபம் பெறலாம். வட்டிக்கு வட்டியும் கிடைக்கும், குறைந்த காலத்தில் முதலீடும் இரட்டிப்பு ஆகும் என்று ஆசைவார்த்தை கூறி பொதுமக்களின் ஆர்வத்தை தூண்டி மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இதுபோன்ற மோசடி சம்பவங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாமில் இதேபோல ஒரு மிகப்பெரிய மோசடி சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக திப்ருகர் பகுதியைச் சேர்ந்த விஷால், கவுஹாத்தியைச் சேர்ந்த ஸ்வப்னில் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களது வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினர். அந்த ரெய்டில் பல கோடி ரூபாய்க்கும் மேல் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு பேரும் 4 போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன் மூலம் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 60 நாள்களில் 30 சதவீத வட்டியும், குறைந்த காலத்திலேயே பணம் இரட்டிப்பாகும் என்று ஆசைவார்த்தை கூறி பொதுமக்களை முதலீடு செய்ய வைத்துள்ளனர். இதனை நம்பி நாடு முழுவதும் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.
அசாம் நடன இயக்குநர் சுமி போராவிற்கும் இந்த மோசடியில் சம்பந்தம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்களின் முதலீடு பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக வட்டி தருவதாகக் கூறி மோசடி கும்பல் பொதுமக்களிடம் பணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், இதுபோன்ற ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மோசடி பேர்வழிகளிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
Aadhar: இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை கிடையாது! சொன்னது போல் செக் வைத்த அமித்ஷா! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications