வங்கி கொள்ளையர்கள் நீரவ் மோடி- மெஹுல் சோக்ஸியால் குஜராத்தில் 2,000 பேர் வேலை இழப்பு!
நீரவ் மோடி, அவரது கூட்டாளி மெஹூல் சோக்ஸியால் குஜராத்தின் சூரத்தில் 2,000 பேர் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.
சூரத்: பொதுத்துறை வங்கிகளை சூறையாடி பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த நீரவ் மோடி, அவரது கூட்டாளி மெஹூல் சோக்ஸியால் குஜராத்தின் சூரத்தில் 2,000 பேர் வேலை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர்.
பல்லாயிரம் கோடி ரூபாய் பொதுத்துறை வங்கிகளை சூறையாடிவிட்டு தப்பி ஓடிவிட்டார் நீரவ் மோடி. இப்போது நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸியின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சொத்துகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் விழுப்புரத்திலும் கூட சோக்ஸியின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வேறுவிதமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
நீரவ் மோடி- மெஹூல் சோக்ஸியின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 2,000 பேர் சூரத்தில் மட்டும் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். மாற்றுவேலைக்காக இவர்கள் தேடி அலையும் உருவாகி உள்ளது என்கின்றன குஜராத் தகவல்கள்.












Click it and Unblock the Notifications