சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த மாட்டோம்: முலாயம்சிங்

Subscribe to Oneindia Tamil

2014 elections: Samajwadi Party not to file candidates against Sonia and Rahul Gandhi
லக்னோ: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முலாயம்சிங் யாதவ், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எனக்கு எதிராக எந்த ஒரு வேட்பாளரையும் காங்கிரஸ் நிறுத்தவில்லை. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் ரேபரேலி மற்றும் அமேதியில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என்றார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலர் மதுசூதன் மிஸ்ரி, முலாயம்சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும் என்று கூறியிருந்தார். அவருக்கு பதிலடியாக சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவும், சோனியா, ராகுலுக்கு எதிராக நாங்களும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சோனியா, ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம் என்று முலாயம்சிங் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+