Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Crime stories 2019: நிறைய ஆண்கள்.. ஏகப்பட்ட அபார்ஷன்கள்.. 6 கொலைகள்.. மறக்க முடியாத ஜோலி

சயனைடு கில்லர் ஜோலியின் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

கோழிக்கோடு: ஆறு கொலைகளையும் அசால்ட்டாக செய்த ஜோலி 3-வது கல்யாணம் பண்ண துணிந்துள்ளார்.. இருந்தாலும் ஜோலிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் அடிக்கடி வெளியில் ஊர்சுற்றி வந்துள்ளார்.. நிறைய இடங்களுக்கும் போய் தங்கி உள்ளார்.. நெருக்கமாக இருந்ததில், ஏகப்பட்ட அபார்ஷன்களை செய்துள்ளார்.

சொத்துக்கான கொலைகள் இவை என்றாலும், பெண்களை கண்டாலும் ஜோலிக்கு பிடிக்காதாம். அதனால் கொலை செய்த 6 பேரில் 3 பேர் மாமியார் உட்பட பெண்களாக இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஜோலியிடம் விசாரணை நடத்தும்போதும், வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் நமக்கு வயிற்றில் புளியை கரைப்பதுபோல உள்ளது.

விஷத்தை கையில் எடுத்து உணவில் கலப்பதற்கு முன்பு கையில் சிறு கீறல் கூட இல்லாமல் கவனமாக இருந்துள்ளார் ஜோலி. காரணம், காயத்தின் வழியாக அவரது உடலுக்குள் விஷம் ஏறி விடக் கூடாது என்பதற்காகவாம். ஒவ்வொரு கொலையையும் மிக மிக தெளிவாக திட்டமிட்டு செய்துள்ளார் ஜோலி. உணவில் விஷம் கலப்பதற்கு முன்பு தனது கையில் எந்த சிறு கீறலும் இல்லாமல் கவனமாக இருந்திருக்கிறார். கொஞ்சம் போல சயனடை அள்ளி உணவில் கலந்து மிக்ஸ் செய்துள்ளார்.

காபியில் விஷம்

காபியில் விஷம்

மாமனாருக்கு காபியில் விஷம் கலந்து தந்துள்ளார். மாமியாருக்கு சூப்பில் விஷம் கலந்து தந்துள்ளார். எல்லோருமே மருமகள் தரும் சாப்பாட்டை நம்பி சாப்பிட்டே செத்து போயுள்ளனர். இதற்காகவே சயனைடு விஷத்தை டப்பா, டப்பாவாக ஜோலி வாங்கி வீடு முழுக்க வைத்திருக்கிறார்.

அபார்ஷன்கள்

அபார்ஷன்கள்

3-வது கல்யாணம் பண்ண துணிந்த ஜோலிக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் அடிக்கடி வெளியில் ஊர்சுற்றி வந்துள்ளார்.. நிறைய இடங்களுக்கும் போய் தங்கி உள்ளார்.. நெருக்கமாக இருந்ததில், ஏகப்பட்ட அபார்ஷன்களை செய்துள்ளார். இதில் ஒரே ஒரு ஆண் நண்பருடன் அடிக்கடி ஊர் சுற்றி உள்ளார். இதை ஜோலியின் செல்போனை ஆராய்ந்தபோதுதான் போலீசாருக்கு தெரியவந்தது. அந்த ஆண் நண்பர் கோவையை சேர்ந்தவராம். யார், என்ன என்று தெரியவில்லை. முதலில் இதை பற்றி கேட்டதற்கு, ஜோலி மறுத்துள்ளார்.

நண்பர்கள்

நண்பர்கள்

பிறகு போலீசார் துருவி துருவி கேட்கவும்தான், ஆண் நண்பரை பற்றி ஒப்புக் கொண்டுள்ளார். ஆண் நண்பருடன் கோவை வந்து போவது, ஜோலி வீட்டு உறவினர்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால், அந்த ஆண் நண்பரிடம் கோவை வந்து கேரள போலீசார் விசாரிக்க உள்ளனர்.

டென்ஷன்

டென்ஷன்

ஆனால், போலீசார் என்ன கேள்வி கேட்டாலும் சரி, ஜோலி கொஞ்சம் கூட டென்ஷன் ஆவதே கிடையாது. ஒரு பதட்டமும் இல்லாமல் கூலாக பதில் சொல்லி கொண்டிருக்கிறார். ஒருபடி மேல போய், "என்னை ஏன் நீங்க முதலிலேயே கைது செய்யவில்லை. அப்படி நீங்க என்னை கைது பண்ணியிருந்தீங்கன்னா.. இவ்ளோ கொலைகள் நடந்திருக்காது இல்லை?" என்ற கேள்வியையும் ஜோலி எழுப்பியதை கண்டு ஷாக் ஆகினர் கேரள போலீசார்!

வக்கீல்கள்

வக்கீல்கள்

நடந்த 6 கொலைகளை தவிர வேறு சில மரணங்களிலும் ஜோலிக்கு கண்டிப்பாக தொடர்பு இருக்கும் என்கிறார்கள். 17 வருட இடைவெளியில் 6 கொலைகளை செய்த ஜோலி கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் மக்கள் திரண்டு எதிர்ப்புகளை காட்டுகிறார்கள். ஜோலிக்காக வாதாட வக்கீல்களும் முன்வராமல் தயங்கினர். ஆளூர் என்பவர் மட்டும் ஜோலி தரப்பில் வாதாட முன் வந்திருக்கிறார்.

விசாரணை

விசாரணை

இதையெல்லாம் பார்த்து அதிகமாக நொந்து பாதிக்கப்பட்டுள்ளார் ஜோலியின் தந்தை ஜோசப். "இப்படி ஒரு அவமானத்தை எங்களுக்கு தேடி தந்துவிட்டாளே.. அவளை முழுசா நாங்க நம்பினோமே.. இப்படி ஏமாத்திட்டாளே.. அவளுக்கு பண கஷ்டம்ன்னு சொன்னாள், அதனால, அவளுடைய மூத்த மகன் படிப்பு செலவை கூட நாங்கதான் பார்த்துக்கிட்டோம்.. எங்களை இப்படி ஏமாத்திட்டாளே" என்று புலம்புகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+